MENU

Show more

கனமழை அறிவிப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.

தீபாவளிக்கு சென்றவர்கள் மூன்று நாள் கழித்து சென்னைக்கு வாங்க - தமிழக முக.முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகமே முடிவெடுக்கலாம் : தமிழக அரசு.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  - முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு அதிகாரி வீதம் ஐஏஎஸ் அதிகாரிகள் 15 பேர் நியமனம்.

சென்னயில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை,  சில ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படலாம் - தெற்கு ரயில்வே 

மழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்கள், ஒன்று முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன மழை காரணமாக ரயில்கள் பகுதி தூரம் நிறுத்தம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு.

சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய வண்டி எண் 06628 West Coast சிறப்பு ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்துடனும், வண்டி எண் 02163 மும்பை - சென்னை ரயில், ஆவடி ரயில் நிலையத்துடனும் நிறுத்தம்.

தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் நாளை மற்றும் நாளை மறுநாள் பள்ளி மற்றும்  கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

மழைக்காலங்களில் பரவும் நோய்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை அறிவுறுத்தல் :

பொதுமக்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் அமைப்பு

*044 29510400*

*044 29510500*

*9444340496*

*8754448477* 

சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்*

கடலுக்குச் சென்று மீனவர்களுக்கு கடலோர காவல்படையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக எச்சரிக்கை.

கனமழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் தற்போது உபரி நீர் வெளியேற்றம் 5000 கன அடியாக அதிகரிப்பு.

கனமழை எதிரொலியால், 4 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அரக்கோணத்தில் இருந்து 3 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், மதுரைக்கு இரு குழுக்களும் அனுப்பி வைப்பு*

சென்னை வேளச்சேரி பகுதியில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.*

தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே மீண்டும் மின்சார ரயில் சேவை நிறுத்தம்.*

*தமிழகம் முழுவதும் கடும் மழை பெய்து வரும் நிலையில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை மீட்க தமிழ்நாடு காவல் துறையின் தேசிய நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.*

மற்ற மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம்... 



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28