MENU

Show more

SCHOOLS REOPEN - TAMILNADU





*01.10.2020 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!!*
Click here to download PDF announcement



*தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு*

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
தமிழகத்தில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் விருப்பத்தின் பேரில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டும் மாணவ, மாணவிகள் வந்து செல்லலாம் என்றும், சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்து செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 10 - 12-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பள்ளிக்கு அழைக்கப்பட வேண்டும்.

10 - 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒரு பிரிவினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். முதல் பிரிவு மாணவர்கள் திங்கள், புதன், வெள்ளியன்று பள்ளிக்கு வரவழைக்கப்பட்டால், இரண்டாம் பிரிவு மாணவர்கள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வரவழைக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களையும் இரண்டு பிரிவாகப் பிரித்து முதல் பிரிவு ஆசிரியர்கள் முதல் இரண்டு நாள்களும், (திங்கள், செவ்வாய்), இரண்டாவது பிரிவு ஆசிரியர்கள் அடுத்த இரண்டு நாள்களும் (புதன், வியாழன்) பணியாற்ற வேண்டும். பிறகு முதல் பிரிவு ஆசிரியர்கள் இரண்டு நாள்களுக்குப் பணியாற்ற வேண்டும்.


10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம். ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிந்து செல்லலாம். பெற்றோரின் அனுமதி பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்றும், தேவைப்படின் வழக்கமான ஆன்லைன் வகுப்புகளையும் தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28