MENU

Show more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு & பாடத்திட்டம் குறைப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - கல்வி அமைச்சர் தகவல் .




மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகளை எப்போது திறப்பது? என்பது குறித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர்கள் கண்ணப்பன், உஷா ராணி, பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆலோசனையில், பள்ளிகளைத் திறக்கும் தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்திருப்பதாகவும், தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை முதலமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சரின் ஒப்புதல் கிடைத்த உடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28