MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 27.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  10 ♝ &   27•8•2019*

🔥
🛡 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய  முடிவின்படி வரும்  வியாழகிழமை (29.08.19) அன்று  அனைத்து வட்டார தலைநகரிலும் தொடக்கக் கல்வியை சீரழிக்கும்  அரசாணை 145-ஐ  உடனடியாக  திரும்ப பெற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த  முடிவு

🔥
🛡 தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதல்வர் அவர்கள் நேற்று தொடங்கி வைத்தார். தினந்தோறும்  காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கல்வி சார்ந்த  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்

🔥
🛡பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் அவர்கள் 7 நாள் பயணமாக பின்லாந்து நாட்டிற்கு செல்கிறார்

🔥
🛡2004 - 2006 வரை தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு  பணிக்காலத்தை பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என  உயர்நீதிமன்றம் உத்தரவு

🔥
🛡போலி பகுதிநேர ஆசிரியர்களை களையெடுக்க கல்வித்துறை முடிவு

🔥
🛡கல்வி தொலைக்காட்சிக்கான பிரத்தியோகமான இணையதளம்  ( Kalvi TV Website) தொடங்கப்பட்டுள்ளது. http://kalvitholaikatchi.com/about.php

🔥
🛡ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡நாட்டுபுற நடனக்கலையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் கோவை ஒன்னிபாளையம்  அரசு பள்ளி ஆசிரியை - நாளிதழ் செய்தி

🔥
🛡தனியார் பள்ளிகளுக்கு இணையாக கம்ப்யூட்டர் லேப், ஸ்மார்ட் கிளாஸ் என அசத்தும் சேலம் மாவட்ட மேச்சேரி அருகே  வன்னியனூர்  கிராமத்து  அரசு நடுநிலைப்பள்ளி.  ஆண்டுதோறும் உயரும் மாணவர் எண்ணிக்கை - நாளிதழ் செய்தி

🔥
🛡வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை இல்லை பரிதவிப்பில் அரசு ஊழியர்கள் - நாளிதழ் செய்தி

🔥
🛡தற்போது 2018-19 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள  CPS Account Slip-இல்  missing credit-ஐ  சரி செய்வதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026