MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 02.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆடி 17 ♝ &  2•8•2019*

🔥
🛡 அனைத்து பள்ளிகளிலும் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேசிய  குடற்புழு  நீக்கும் திட்டம் மூலம் மாத்திரை வழங்கப்பட்டு அதன்  அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡 புதிதாக திறக்கப்படும் பள்ளிகளுக்கு udise code வழங்கும் முறை குறித்து  மாநில  திட்ட இயக்குனர்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡ஐகோர்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து வகை பள்ளிகளை ஆய்வு மேற்கொள்ளுதல் - திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு.

🔥
🛡சேலம் மாவட்டம் - கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

🔥
🛡தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம் M.Ed இரண்டாண்டு படிப்பிற்கு சேர்க்கை அறிவிப்பு : கடைசி நாள் 17.8.19.

🔥
🛡பள்ளிக் கல்வித் துறையில்  இணை இயக்குநர் திரு. இராதா கிருஷ்ணன் [ மேல் நிலைக் கல்வி ] JD (HS) ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, இணை இயக்குநர் (தொழிற் கல்வி) திருமதி. சுகன்யா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


🔥
🛡மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு : நாடு முழுவதும் 3.50 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி.

🔥
🛡புதிய பாடநூல்களில் பிழைகளை கண்டறிய ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு : மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் திட்டம்.

🔥
🛡பிளஸ் 2 வகுப்புக்கு வழங்குவது போன்று மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை ஊக்குவிக்க பத்தாம் வகுப்புக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28