MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 19.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  2 ♝ &   19•8•2019*

🔥
🛡பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

🔥
🛡பள்ளி மாணவ, மாணவிகள் 80 சதவீதத்திற்கு மேல் வருகைப்பதிவு இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 2 மதிப்பெண்கள் வழங்கலாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

🔥
🛡மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம் - நாளிதழ் செய்தி

🔥
🛡மாணவர்கள் ஆங்கிலம் கற்க 2,000 வார்த்தைகளை கொண்ட குறுந்தகடு (CD) வழங்கப்படும் -  செங்கோட்டையன் அறிவிப்பு

🔥
🛡அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து
அரசு உயர்நிலை பள்ளிகளிலும்  LKG, UKG வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡டிப்ளமா நர்சிங் படிப்புக்கு, வரும், 26ல் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

🔥
🛡உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவுக்கு செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித்  துறை செயலாளர் பிரதீப் யாதவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡நீர் மேலாண்மை இயக்கம் - அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்முறை திட்டங்கள் வெளியீடு

🔥
🛡பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும், 26ம் தேதி துவக்கப்பட உள்ளது.

🔥
🛡பிறந்த நாளன்று, மாணவர்கள் இனிப்பு வழங்குவதுடன், புத்தகங்கள் வழங்கவும் அறிவுறுத்த வேண்டும்' - பள்ளி கல்வித்துறை

🔥
🛡குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பாக, 2019 அக்டோபர் மற்றும் 2020 ஏப்ரல் ஆகிய இரு பருவத் தேர்வுகளில் பங்கேற்று தேர்வெழுத அனுமதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026