MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஐப்பசி 28♝ 14•11•2018*

🔥
🛡சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்க ஆசிரியர்களின் பெயர் பரிந்துரை தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡10, +1, +2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியீடு.

🔥
🛡 பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு LKG, UKG  வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

🔥
🛡 கேபிள் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்.

🔥
🛡 கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்
சார்பில்  ஆசிரியர்களுக்கு 'கற்றல் விளைவுகள்' பயிற்சி விரைவில் நடத்தப்பட உள்ளது

🔥
🛡பள்ளிக்கல்வி-Agni Foundation என்ற தனியார் நிறுவனம் Ignite India Science Innovation - Season 5 என்ற அறிவியல் கண்டுபிடிப்பு -மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் நடத்துதல் - உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவித்தல் -சார்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡 தமிழக பொதுப்பணித் துறைக்கு ரூ2 கோடி அபராதம்
விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡 மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

🔥
🛡 ஈரோடு மாவட்டம்  பெருந்துறை அடுத்த சீனபுரத்தில் உள்ள ரிச்மன்ட் பள்ளி வளாகத்தில், கழிவு நீர் அதிக அளவில் தேங்கி கொசுக்கள் உருவானதால், மாணவர்களின் நலன் கருதி ஒரு வார காலம் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு.

🔥
🛡வாணியம்பாடியில் கவனக்குறைவாக கதவை பூட்டி சென்றதால் கழிவறையில் தவித்த 1ஆம் வகுப்பு மாணவி : பள்ளி முற்றுகை - நாளிதழ் செய்தி.

🔥
🛡பிளஸ் 2 துணை தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கோரியவர்கள், நேற்று பிற்பகல் முதல்,scan.tndge.in என்ற, இணையதளத்தில், விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்

🔥
🛡போலி மாற்றுச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் திருவண்ணாமலை, ஆரணி அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம்

🔥
🛡மதுரை கல்வித்துறையில் 'ஆபரேஷன்-இ' திட்டத்தை ரத்து
செய்ய வேண்டும்
அல்லது கல்வி ஆலோசனை குழு என பெயர் மாற்றம் வேண்டும்
என, ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

🔥
🛡 வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயலினால், நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் : புயல் நவம்பர் 15 ஆம் தேதி அன்று பிற்பகலில் பாம்பனுக்கும் கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கும்.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026