MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 4.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 19♝ 04•09•2018*


🔥
🛡அரசு உயர் - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி, உடற்கல்வி, இடைநிலை & சிறப்பாசிரியர்கள் பகுதி நேரத்தில் M.Phil, Ph.D பயில - தடையின்மைச் சான்று கோரும் கருத்துருக்களை பரிந்துரைக்கும்போது கூடுதல் விவரம் கோருதல் சார்பாக பள்ளிக் கல்வி துறை இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡SPD PROCEEDINGS-SSA TamilNadu-Instruction to all CEOs to communication the information sent by MHRD that celebration of 125th year of Swami Vivekananda on 11.09.2018

🔥
🛡திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் Tnschools Attendance App பயன்படுத்துவது குறித்து செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡CBSE பள்ளிகள் போன்று வீட்டுப்பாடங்கள்  ரத்து நடைமுறை மாநில அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்படுமா? - கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு.

🔥
🛡திரு.த.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡வாசிக்க திணறும் மாணவர்களுக்கு, இந்த மாதம் முதல் சிறப்பு பயிற்சி - ஆசிரியர்கள் எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் - இயக்குநர் அறிவுரை வெளியீடு.

🔥
🛡கல்விக்கடன் 2017-18 ஆண்டுக்குரிய  வட்டிமானியம் பெற செப்டம்பர் 28க்குள் வங்கிகள் விண்ணப்பிக்க வேண்டும் - MHRD அறிவுறுத்தல்.

🔥
🛡 தமிழ் அல்லாத பிறமொழி மாணவர்களுக்கு
9, 11ஆம் வகுப்பு மொழிப்பாடப் புத்தகம் விரைவில் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

🔥
🛡காலியாக உள்ள 2000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

🔥
🛡 PHD பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால் தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு -
புதிய நிபந்தனை -  அண்ணா பல்கலைக் கழகப் பரிசீலனை.

🔥
🛡 அரசுப்பணியாளர் தேர்வாணைய 2015 குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கில் செப்டம்பர் 5-ல் சென்னை  உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது

🔥
🛡
மலையடிவாரத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் இருந்த வேலூர் மாவட்டம் கந்திலி வட்டார, ராஜாவூர் ஆரம்பப் பள்ளியை, அதன் தலைமை ஆசிரியர் இந்திரா தன் சொந்தச் செலவில் நவீன பள்ளியாக மாற்றியிருப்பதோடு அல்லாமல் கற்பித்தல் முறையில் மாற்றம் செய்து , பல்வேறு விருதுகள் பெற்று தந்துள்ளார்.

🔥
🛡அரசு பள்ளிகளில் தையல் மற்றும் ஓவிய
ஆசிரியர்
பணிகளுக்கான பட்டியலில் தகுதி இல்லாதவர்களின் பெயர்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக TRB  தலைவர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡கன்னியாகுமரியில்
செப்.8, 9 ல் அகில இந்திய பெண் ஆசிரியைகள் மாநாடு நடக்கிறது. அகில இந்திய பெண் ஆசிரியைகள் ஒருங்கிணைப்புக்குழு, இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளடக்கிய)  சார்பில் இம்மாநாடு நடக்க உள்ளது.
செப்., 8ல் பெண் உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி, கல்லுாரி, பல்கலை ஆசிரியைகள் சந்திக்கும் பிரச்னைகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

🔥
🛡இளம் விஞ்ஞானி விருது பெற்ற தர்மபுரி மாவட்டம் ,பாலக்கோடு தாலுகா நல்லாம்பள்ளியை சேர்ந்த கூலி  தொழிலாளி மகன் சக்திவேல் சூரிய ஒளியிலிருந்து செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் நூதன முறையை கண்டுபிடித்தார்.

🔥
🛡தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி
மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 8ஆம் தேதி தொடக்கம் -  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

🔥
🛡தமிழகம் முழுவதும் பொறியியல்
கல்லூரிகளில் 77 சதவீதம் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

🔥
🛡ஆகஸ்ட் 31க்குள் வருமான வரி தாக்கல் செய்யத் தவறியவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமான வரியைச் செலுத்தினால் ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் செலுத்த வேண்டும். 


Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026