MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 26♝ 11•09•2018*


🔥
🛡 ஜாக்டோ ஜியோ விரிவடைந்த உயர்மட்ட குழுக் கூட்டம்  16.9.18 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சேலத்தில் கூடுகிறது.
கூட்டப் பொருள் : அக்டோபர் 4 CL போராட்டம் & அக்டோபர் 13 சேலம்  மாநாடு & நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆகிய தொடர் போராட்டங்கள்.

🔥
🛡பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கரின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுகள் துறை சுற்றறிக்கை.

🔥
🛡 பள்ளிக்கல்வி - மாவட்ட வாரியாக அரசு தேர்வு அலுவலகங்கள் துவக்க உத்தரவு; புதிய அலுவலர்களை நியமிக்க உத்தரவு - அரசாணை.

🔥
🛡 INCOME TAX:  உரிய நேரத்தில் E - TDS முடித்து ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்க பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுரை.

🔥
🛡 நவம்பர் 1 முதல்
மாதாந்திர ஊதியத்தில்
பிடிக்கப்படும்
வருமானவரி அவரவர் PAN
கணக்கில் அவ்வப்போது
மாதந்தோறும் வரவு
வைக்கப்படும். இதனால்
E-Tds செய்வது
இனிமேல்
தேவைப்படாது.
மார்ச் மாதம் ஆசிரியர்கள் மற்றும்
அரசு ஊழியர்கள்
நேரடியாக வருமான வரி
படிவம் தாக்கல்
செய்யலாம் - கருவூல கணக்குத்
துறை முதன்மைச்
செயலாளர் மற்றும்
கருவூலத் துறை
ஆணையாளர்
தென்காசி ஜவகர் IAS அவர்கள் ஒப்புதல்.

🔥
🛡 இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி  பரமக்குடி, சிவகங்கை,  இளையாங்குடி, மானாமதுரை, திருப்புவனம்  உள்ளிட்ட 5 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

🔥
🛡 பாலியல் புகாருக்கு உள்ளாகி பணிமாறுதலில் நியமிக்கப்பட்ட   திருவண்ணாமலை கேந்தீரிய வித்யாலயா பள்ளி முதல்வர் அம்மாவட்ட ஆட்சியரால் நீக்கப்பட்டுள்ளார்.

🔥
🛡 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் தட்கலில் விண்ணப்பிக்கலாம் -  அரசு தேர்வுத்துறை தகவல்.

🔥
🛡 பாராமெடிக்கல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் நடைபெற்று வருகிறது.

🔥
🛡பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானத்தை வளர்க்கும் வகையில் 60 பள்ளிகளில் பரிசோதனைக் கூடம் (லேப்) அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡கடையடைப்பு போராட்டத்திற்கு இடையே
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு. பொருட்கள் விலை உயரும் அபாயம்!!

🔥
🛡இரண்டு காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🔥
🛡பெட்ரோல் டீசல் விலை உயர்வை
கண்டித்து நேற்று தேசம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு இருந்ததை பார்க்க முடிந்தது.

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026