MENU

Show more

துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு

பாராமெடிக்கல் அட்மிஷன்

துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 10ம் தேதி துவங்குகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., - பி.ஓ.டி., உள்ளிட்ட, 15 துணை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டில், 8,000; நிர்வாக ஒதுக்கீட்டில், 4,000த்திற்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
இதற்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், அரசு மருத்துவ கல்லூரிகளில், வரும், 10ல் துவங்கி, 19ல் முடிகிறது.
மேலும், www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களிலும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 20க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026