MENU

Show more

TANUVAS UG ADMISSIONS 2022-23

TANUVAS UG ADMISSIONS 2022-23 

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேல் விண்ணப்பம் 

செப்.26-ம் தேதி கடைசி நாள்

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஒரு வாரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. நேற்று மாலை வரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்.14-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE FOR APPLY

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28