MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.2.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 மாசி 02 ♝ &* 
14.02.2020

🔥
🛡 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இன்று தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது

🔥
🛡Safety and security பயிற்சி சார்ந்து ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளியில் செய்ய வேண்டிய செயல்முறை & நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநர்  செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்

🔥
🛡கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வயது வரம்பு 35 என நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது

🔥
🛡TET தேர்ச்சி பெறாத நிபந்தனை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி எப்போது - நாளிதழ் செய்தி

🔥
🛡பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு பிரச்னையை தீர்த்து வைத்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு, ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு நன்றி தெரிவித்துள்ளது

🔥
🛡பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் கல்வி அதிகாரிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுக்கால ஹெல்ப் லைன்களும் வெளியிட்டுள்ளது

🔥
🛡அரசு பணியிடங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆதிசேஷய்யா கமிட்டி முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை தாக்கல் செய்தது

🔥
🛡பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

🔥
🛡நாடு முழுவதும் மாணவர்களின் சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் 2 ஆசிரியர்கள் சுகாதாரம் மற்றும் உடல்தகுதி தூதர்களாக செயல்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

🔥
🛡TRB - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு . முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஒரே மையத்தில்  அதிக அளவில் தேர்ச்சி பெற்றதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு- சிபிஐ விசாரிக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள்  டுவீட்!

🔥
🛡கோவையில் 5-ஆம் வகுப்பு பயிலும்  பட்டியலின மாணவர்கள்‌ மூலம்‌ பள்ளியின் கழிவறையை சுத்தம்‌ செய்யவைத்த தலைமை ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்‌ டுள்ளது.

🔥
🛡RTI - பிப்ரவரி மாத சம்பளப் பட்டியல் உடன் வருமானவரி கணக்கீடு படிவம் மற்றும் பிடித்தங்கள் செய்தற்குரிய சான்று இவற்றை கருவூலத்துக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை.

🔥
🛡ஓய்வூதியப் பணத்தில் மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி மகிழும் மாமனிதர் ரங்கராஜன் ஸ்ரீதர்..

🔥
🛡அகரம் பவுண்டேஷன் நடத்திய கட்டுரைப் போட்டியில் வென்று நடிகர்  சூர்யா நடிக்கும்  சூரரைப் போற்று  படத்தின் இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக  விமானத்தில் பயணித்த  அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 50 மாணவர்கள், 100 ஆசிரியர்கள், பெற்றோர்கள்.





Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27