MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 03.02.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2051 தை 20 ♝ &* 
03.02.2020

🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2019-20-ஆம் ஆண்டு  அனைத்து ஆரம்ப/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்  (Youth & Eco Club) ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡TNPSC - குரூப் II தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு  கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு!!

🔥
🛡தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார்கோயில் குடமுழுக்கு திருவிழாவில் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆசிரியர்கள் 3.02.2020 மற்றும் 4.02.2020 ஆகிய இருதினங்கள் பணியிலிருந்து விடுவித்து  திருப்பனந்தாள் BEO ஆணை.

🔥
🛡5,8 ஆம் வகுப்புக்கு வேண்டாம் பொதுத்தேர்வு'' என என பல்வேறு தரப்பினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆதித்தமிழர் பேரவை அமைப்பினர் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டை  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

🔥
🛡CBSE பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி10-ம் வகுப்புக்கு மார்ச் 20-ம் தேதி வரை +2க்கு மார்ச் 30 வரை தேர்வுகள் நடைபெறும் : தேர்வு நடைமுறைகளை முன்னிட்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி -  CBSE அறிவிப்பு.

🔥
🛡இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தேக்க நிலை(Stagnation) அடைவதைக் களையக் கோரி - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி  ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

🔥
🛡SHAALA SIDDHI - பள்ளி தரநிலை மற்றும் மதிப்பீட்டுத் திட்டவரைவு  வெளியிடப்பட்டுள்ளது

🔥
🛡தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்தல் பணி செய்த அலுவலர்களுக்கு, மதிப்பூதியம் வழங்க, 48.94 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது : மாவட்ட கலெக்டர்கள், நிதியை பெற்று, தேர்தல் பணி செய்தவர்களுக்கு வழங்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

🔥
🛡TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க திட்டம்.

🔥
🛡கல்வித்துறை,தேர்வுத்துறை தினம்,தினம் அறிவிப்புகள் குழப்பம். அரசு பொதுத் தேர்வுகளுக்கு ப்ளூ பிரிண்ட் வெளியீடு எதிர்பார்ப்பு. குளறுபடிகளால் மாணவ மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் குறைய வாய்ப்பு - நாளிதழ் செய்தி

🔥
🛡குரூப்-1 , குரூப் 2 ,குரூப் 2ஏ.. எந்தெந்த தேர்வுகளில் முறைகேடு என பலவாறாக எழுந்த பல புகார்களுக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்து டிஎன்பிஎஸ்சி விளக்கம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27