MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.02.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 தை 28 ♝ &* 
11.02.2020

🔥
🛡தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் -  இருபத்து மூன்று அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு இடைத்தரகர் ஜெயக்குமார் விற்பனை செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

🔥
🛡சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில்  B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர்  தனிப்பிரிவில் இணை ஆகாது என  பதில் அளிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡ஜாக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தின்போது 6,000 பேர் மீது எஃப்.ஐ.ஆரும் 7,000 பேருக்கு 17 பி-என்ற விளக்க நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனச் சென்னையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில்
 "NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் விவரம் கோரி கல்வி அதிகாரி உத்தரவு

🔥
🛡முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்வது தொடர்பாக திருவள்ளுவர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய முதன்மை செயலராக, தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், துறையின் செயல்பாடுகளில் நிலவும் குளறுபடிகளை நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது - நாளிதழ் செய்தி

🔥
🛡மிரட்டும் IFHRMS அரசுன் - மிரட்சியில் தமிழக அரசு ஊழியர்கள் - நாளிதழ் செய்தி

🔥
🛡மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில், சனிக்கிழமை தோறும், புத்தக பை இன்றி, மாணவ - மாணவியர் பள்ளிக்கு வர அறிவுறுத்திய பின், பாடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்

🔥
🛡 TNPSC முறைகேடு எதிரொலி - குரூப் - 1 தேர்வில் வென்று பணியில் இருப்பவர்கள் யார் முழு விவரங்களையும் வெளியிட்டது TNPSC.




Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27