MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 04.11.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஐப்பசி 18 ♝ &   04•11•2019*

🔥
🛡சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

🔥
🛡தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்க தயக்கம் :
பல்வேறு மாநிலங்களில்  கல்லூரி பேராசியர்களுக்கான M.Phil & Ph.D ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு.

🔥
🛡NMMS - தேர்வு விண்ணப்பிக்க 04.11.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு.

🔥
🛡பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17 வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில் நடத்தப்பட உள்ளதால்
தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை

🔥
🛡மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையக் காரணமானவர்கள் மற்றும் முன் அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் : இது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு மட்டும் பொருந்தும் -
உத்தராகண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை ஒரு முடிவு.

🔥
🛡EMIS -ற்காக புதியதாக உருவாக்கப்பட்ட மாநில பிரிவிற்கான  திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

🔥
🛡சிவசங்கை மாவட்ட ஆட்சியர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் -உடல்தானம் அதிகம் செய்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

🔥
🛡ஆசிரியர்கள் மத்தியில் வருத்தங்கள் உள்ளன. அதனை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அவை விரைவில் களையப்படும். ஆசிரியர்களுக்கு சில இடர்பாடுகள் இருக்கலாம். அவற்றையும் விரைவில் களைவோம் என பள்ளிக்கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

🔥
🛡புதுதில்லியில் மாநாடு - இதில் கலந்துக்கொள்ள இருப்பவர்கள் தலைமைப்பண்பு குறித்து நவம்பர்-7ஆம் தேதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

🔥
🛡தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரம் பின்தங்கி உள்ளதை தொடர்ந்து, கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய உத்தரவு



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28