MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.11.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஐப்பசி 25 ♝ &   11•11•2019*

🔥
🛡இன்று முதல் பள்ளிக்கல்வி துறையில் (மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு)  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். )

🔥
🛡அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை முடிவு : ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

🔥
🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – குறைபாடுகளைக் களைந்து நடத்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

🔥
🛡எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

🔥
🛡DEE – திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகளை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நவம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

🔥
🛡சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடங்களை தகுதி உள்ள சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களை கொண்டு நிரப்பிட ஆணை பிறப்பித்துள்ளார் சமூகநல துறை ஆணையர்.

🔥
🛡ஆசிரியர்கள் வழக்கால் திணறும் பள்ளிக்கல்வித்துறை - நாளிதழ் செய்தி

🔥
🛡NEET EXAM பயிற்சியில் முறைகேடு : தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம் கல்விர்த்துறை அதிகாரி விசாரணை - நாளிதழ் செய்தி.

🔥
🛡பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் இனி இல்லை - CM cell reply - ஆசிரியர்கள் அதிர்ச்சி : பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாகும் பட்சத்தில் அப்பணியிடங்களை உபரி ஆசிரியர்களை கொண்டு பணிநிரவல் மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

🔥
🛡பள்ளி மாணவர்களிடம் டிக் டாக் மோகம் அதிகரிப்பு - பெற்றோர், ஆசிரியர்கள் கண்காணிப்பு தேவை :  உளவியல் கவுன்சலிங் திட்டம் பள்ளிகளில்  முடக்கம் அடைந்துள்ளது. பள்ளி & கல்லூரி  மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

🔥
🛡கோவில்பட்டி அருகே ஆசிரியையை கத்தியால் குத்த‌ முயன்ற சமையலரை போலீசார் தேடி வருகின்றனர். ஆசிரியை கலைச்செல்விதான், சத்துணவை பற்றி புகார் அளித்திருக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் சமையலர்  லட்சுமி இச்செயலில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்

🔥
🛡வரும் மார்ச் மாதம் +2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் இல் தேர்வு கட்டணம் செலுத்த நவம்பர் -29-ஆம் தேதி கடைசி நாளாகும்

🔥
🛡ஜூலை 15 அன்று காமராஜர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய ‌பள்ளிக்கு பரிசுகள் வழங்கப்படும் -வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28