MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 06.11.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஐப்பசி 20 ♝ &   06•11•2019*

🔥
🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார்

🔥
🛡5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு

🔥
🛡புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜனவரி  8-ல் வேலை நிறுத்தம். STFI-அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும்,TNPTF மேனாள் தலைவருமான  தோழர்.மோசஸ் அறிவிப்பு

🔥
🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் - தொடர்பாக மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡School needs - EMIS  இல் பதிவு செய்யப்பட்டுள்ள  பள்ளிகளின்  தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால்  உருவாக்கப்பட்டுள்ளது.
https://contribute.tnschools.gov.in/csr/#/home

🔥
🛡திருச்சியில் எலைட் சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய பரமபத விளையாட்டு மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் நலன் காக்கும் பயிற்சி  பள்ளியில் நடைபெற்று வருகின்றது

🔥
🛡"பெரியார் 1000 " வினா - விடைப்போட்டியில் பங்குபெறும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பரிசுகள் - எனவே இப்போட்டி தேர்வில் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

🔥
🛡ஜல்சக்தி அபியான் திட்டம்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு.
பள்ளியிலும், வீட்டி லுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும். தண்ணீர் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28