MENU

Show more

பிளஸ் 1&2 பாடத்திட்டம் மாற்றம்

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்புக்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில், பிளஸ் 2வுக்கும், புதிய பாடத்திட்டம் வரவுள்ளது. இதற்காக, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், ஐ.சி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி சான்றிதழ் படிப்பு, லண்டன், 'கேம்பிரிட்ஜ்' பாடத்திட்டம் ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நம்நாட்டில், பள்ளிக்கல்வியில், தரமான பாடத்திட்டம் உடைய, மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள பாடத்திட்டங்களும், தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
தேசிய கல்வியியல் வரைவு அறிக்கை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டம் ஆகியவற்றுடன், பிரிட்டனின் பள்ளிப்படிப்பு பாடத்திட்டத்தையும் இணைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக, பல்கலைகளின் தற்போதைய மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆங்கில புலமை பெற்ற பேராசிரியைகள், ஐ.ஐ.டி., ஆசிரியர்கள் ஆகியோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக்குழு, மூன்று மாதங்களுக்குள் பாடத்திட்டத்தை இறுதி செய்து வழங்கும்.அதன்பின், சர்வதேச தரத்தில் பாட புத்தகங்களை வடிவமைக்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
✍✍✍✍✍✍✍✍✍✍

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026