SBI வங்கி கட்டணம் உயர்வு ? Image : pintrest எஸ்.பி.ஐ. பயனாளரா நீங்க? கட்டணம் உயர்வுக்கு தயாராகுங்கள் - எதற்கெல்லாம் தெரியுமா? பாரத் ஸ்டேட் வங்கி குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 1ஆம் தேதி முதில் குறிப்பிட்ட சில டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை ரூ.75 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம், யுவா, கோல்டு, காம்போ, காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தை எஸ்பிஐ உயர்த்தியுள்ளது. எவ்வளவு தெரியுமா? எஸ்.பி.ஐ. அறிவிப்பின்படி, கிளாசிக், சில்வர் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.125 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜி.எஸ்.டி. இல்லாமல் ரூ.200ஆக உயர்த்தியுள்ளது. யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டுகளுக்கு தற்போது ரூ.175 வசூலிக்கப்பட்டிருந்தது. இதில், ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக உயர்த்தியுள்ளது எஸ்பிஐ. பிளாட்டினம் டெபிட் கார்டுக்கு ஆண்டு பராமரிப்பு தொகை ஜிஎஸ்டி இல்லாமல் ரூ.250 ஆக வசூலிக்...