MENU

Show more

CHAT GPT AI பயன்படுத்துவது எப்படி ?

CHAT GPT AI 

சாட்ஜிபிடியை பயன்படுத்துவது எப்படி?

தகவல்கள் தமிழில் கிடைக்குமா?

ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் சாட் ஜிபிடி. 

ஏன் இப்பெயர் என்றால் அரட்டை அடிப்பது போல் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம் கேள்விகளையோ, தகவல்களையோ தந்து நமக்கு தேவையானவற்றை பெறலாம். இது கூகுளை விட ஒரு மேலே என கூறலாம்.

 இதனை பயன்படுத்தக் கற்றுக்கொண்டால், சிறு சிறு வேலைகளை இதை வைத்து செய்துகொள்ளலாம்.

சாட் ஜிபிடி Vs கூகுள்

இரண்டுமே தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கக் கூடியவை தான். கூகுளிடம் நாம் ஒரு தகவலை கேட்டால் அது இணையத்தில் அது தொடர்பாக இருக்கும் அனைத்தையும் சேகரித்து பயனர்களுக்கு வழங்கும். 

அதில் எது நமக்கு தோதானவை என நாமும் நம் பங்கிற்கு அலசி ஆராய்ந்து சரியானவற்றை எடுத்துக்கொள்வோம்.

சாட்ஜிபிடி என்பது மனிதர்கள் எவ்வாறு பதிலளிப்பார்களோ அதே போல் பதிலளிக்கும். சாட்ஜிபிடியிடம் பரந்த அளவிலான தகவல்கள் உள்ளன. அதிலிருந்து கேட்கும் தகவலை உரை சுருக்கம் செய்து வழங்கும்.

 மொழிபெயர்க்க வேண்டுமெனில் அதையும் செய்யும். கச்சிதமாக கேட்கும் தகவலுக்கு மட்டும் தனது டேட்டா பேஸ் படி பதிலளிக்கும். 

அந்த பதிலில் திருப்தியில்லை எனில் மேலும் புரியும்படி கேள்வி கேட்டு தகவலை பெறலாம்.

எப்படி பயன்படுத்துவது?

 கீழ்காணும் லிங்க் மொபைல் அல்லது கணினியில் ஓபன் செய்தால், சைன் அப் செய்யச் சொல்லி கேட்கும். 

CLICK HERE CHAT GPT AI LINK

ஏற்கனவே இருக்கும் உங்களின் கூகுள் கணக்கு அல்லது மைக்ரோசாப்ட் கணக்கினை தந்தும் உள்நுழையலாம். இல்லையெனில் புதிதாக ஒரு கணக்கினை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வளவு தான் தற்போது உரையாடல் அறைக்குள் அழைத்துச் செல்லும் சாட்ஜிபிடி.

அங்கு எவ்வாறு தகவலை பெற வேண்டும் என உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

தமிழ், ஆங்கிலம் என 100 மொழிகளில் உரையாடக் கூடியது சாட்ஜிபிடி. நீங்கள் தகவலை தந்து பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது அலுவலகத்துக்கு தேவையான கடிதம் எழுதி பெறலாம். 

பல தலைப்புகளில் கட்டுரைகளை பெற முடியும். தெரியாத கேள்விகளுக்கு சுருக்கமாக, தெளிவாக விடையளிக்கும்.

நீங்கள் முந்தைய உரையாடலின் போது குறிப்பிட்டதை நினைவில் வைத்திருக்கும் திறன் இந்த செயற்கை நுண்ணறிவுக்கு உண்டு. சம்பந்தமில்லாத கோரிக்கைகள் வைத்தால் அவற்றை நிராகரிக்கவும் தெரியும்.

இதில் குறைபாடுகளும் உள்ளன. ஆங்கிலத்தில் சரளமாக தகவல்களை தரும் அளவுக்கு தமிழில் தருவதில்லை. திக்கி திணறுகிறது. படிக்க சிரமமான மொழி நடையில் அவை உள்ளது. மொழிபெயர்ப்பிலும் துல்லியம் இல்லை.

 எப்போதாவது தவறான தகவல்களை வழங்கவும் வாய்ப்பிருப்பதாக சாட்ஜிபிடியே கூறுகிறது. 2021 வரைக்குமான தரவு தளம் தான் இதனிடம் உள்ளது.

 2021-க்கு பிறகான நிகழ்வுகள் குறித்து போதுமான அளவில் தகவல்கள் இல்லாததால், அது பற்றி கேட்கும் போது முழுமையான பதில் கிடைக்காமல் போகும்.

வீடியோ சர்ச் என்ஜின்.

இன்று உலகம் முழுக்க வீடியோவில் தகவல்களை தேடிப் பார்ப்பது அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சர்ச் என்ஜினாக முதலிடத்தில் இருப்பது கூகுள் இல்லை. டிக் டாக் தான். 

மனிதர்கள் தங்கள் அனுபவங்களைக் கொண்டு உருவாக்கி வெளியிடும் வீடியோ என்பதால் இவற்றில் ஆர்வமுடன் மக்கள் தகவல் சேகரிக்கின்றனர். 

இந்த நிலையில், எழுத்து மூலமாக தகவல் சொல்லும் சாட்ஜிபிடி பெரிய அளவில் வளர முடியுமா என்பது சந்தேகம் தான் என டெக் நிபுணர்கள் சிலர் கணிக்கின்றனர். 

கடிதம் எழுதுவது, கட்டுரை எழுதுவது, கணக்கு போடுவது போன்ற கிளரிக்கல் வேலை தான் சாட்ஜிபிடி இப்போதைக்கு செய்கிறது.

நன்றி : The Seithikathir 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026