MENU

Show more

ஜூன் 18ம் தேதி ஐ.ஐ.டி., தரவரிசைப் பட்டியல்

ஜூன் 18ம் தேதி ஐ.ஐ.டி., தரவரிசைப் பட்டியல்

ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான நுழைவு தேர்வு முடிவு மற்றும் தரவரிசைப் பட்டியல் வரும், 18ம் தேதி வெளியாக உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், தமிழகத்தில் அண்ணா பல்கலையின் இணைப்புக் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க, அண்ணா பல்கலையில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் சேர, ஜே.இ.இ., எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

இதில், இரண்டு விதமான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஐ.எஸ்.எம்., என்ற இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் ஆகியவற்றில் படிக்க, ’ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்’ என்ற தேர்வை எழுத வேண்டும். இதற்கு முதலில், ஜே.இ.இ., மெயின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மே, 24ம் தேதி முடிந்தது.

தேர்வு முடிவுகள் வரும், 18ம் தேதி வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் உள்ள, 17 ஐ.ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் படிக்க முடியும்.

இதே போல், ஐ.ஐ.ஐ.டி., என்ற இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, சென்னை, கிண்டியிலுள்ள சி.எப்.டி.ஐ., என்ற மத்திய காலணி உற்பத்தி பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில், பி.டெக்., - எம்.டெக்., படிப்புகளில் சேர, ’ஜே.இ.இ., மெயின்’ என்ற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனாலும், ’ஜே.இ.இ., அட்வான்ஸ்ட்’ தேர்வு முடிவுக்காக, தரவரிசை பட்டியல் தயாரிப்பு தாமதமாகியுள்ளது. ஜே.இ.இ., மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் வெளியாகும்.

இதுகுறித்து, ஐ.ஐ.ஐ.டி., அதிகாரிகள் கூறியதாவது: தேர்வு முடிவுகள் வெளியானதும், சி.எஸ்.ஏ.பி., எனப்படும், மத்திய கல்வி நிறுவன இடங்கள் ஒதுக்கீடு வாரியத்தின் இணைய தளத்தில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும். பின், ’ஆன்லைன்’ கவுன்சிலிங்கில் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களை தேர்வு செய்யலாம்.


Comments

POPULAR POST OF OUR WEB

SLAS EXAM MODEL QUESTIONS PDF

ENNUM EZHUTHUM LESSON PLAN 10 NOV 2026

ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2026: தமிழகம் முழுவதும் 1,890 காலிப்பணியிடங்கள் – தகுதி, சம்பளம் முழு விவரம்!

TNTET Study Material PDF Download 2026 – Paper 1 & Paper 2 Tamil Notes, Questions & Answers

NOVEMBER 2026 SCHOOL CALENDAR