தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி !!
TET PROMOTION CASE
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள். இதனால் மாணவர்கள் கல்வி நலன் பெரும் பாதிப்புள்ளாகும் சூழல் உருவாகி உள்ளது... இந்த நிலையில் பதவி உயர்வு பெறுவதற்கு TET தேர்ச்சி தேவையா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இந்த வாரத்தில் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு பள்ளிகளை எவ்வாறு நடத்துவது என பெற்றோர்களும் , ஆசிரியர்களும் புலம்பி வருகின்றனர். இந்த வழக்கை காரணம் காட்டி தலைமை ஆசிரியர் நியமிக்கப் படாமல் இருப்பது பெற்றோர்கள் , பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் பின்தங்கிய மாணவர்களே அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். இம்மாணவர்களின் கல்வியை உறுதி செய்வது நம் அனைவரது கடமை அல்லவா ?
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுமா ? அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள் நம் பெருமை அல்லவா ?
Yes that's true
ReplyDelete