MENU

Show more

மாநில கல்வி கொள்கை அமைக்க குழு - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை அமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு 



கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்;

உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்;

திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்;

பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;

பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;

முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப்

நிறுவனம்;

திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்;

திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்.

திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்;

திரு.துளசிதாஸ், கல்வியாளர்;

முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்;

திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்;

திருமதி.ஜெய$ தாமோதரன், அகரம் அறக்கட்டளை

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும். 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28