MENU

Show more

TNPTF தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் 


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. 

தமிழகமெங்கும் திரளான ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் 

மாநில தலைவர் தோழர் மணிமேகலை அவர்கள் தலைமை உரையாற்றினார். 

மாநில பொதுச்செயலாளர் தோழர் மயில் அவர்கள் போராட்ட விளக்கவுரை ஆற்றினார்..


பொதுக்குழு உறுப்பினர் தோழர் மோசஸ் போராட்ட எழுச்சியுரை ஆற்றினார் 

மேலும் இப்போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர்களான திரு.ஆர்.எஸ்.பாரதி , திமுக, திரு.முத்தரசன் , திரு.டி.கே ரங்கராஜன் கம்யூனிஸ்ட் , திரு.தொல்.திருமாவளவன் எம்.பி, விசிக உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்..

TNPTF தொடர் போராட்ட முழக்கம் 

போராட்ட முழக்க காணொளி 

மேனாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் அறிவித்தது போல CPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும், வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்து ஆசிரிய பெருமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

செய்தி தொகுப்பு : 
R.R 
ADMIN
TNSOCIALPEDIA

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026