MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 05.05.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 சித்திரை 22 ♝ &* 
05.05.2020

🔥
🛡தமிழகத்தில் 10 வகுப்பு பொதுதேர்வானது வருகிற ஜூன் மாதம் 3  வது வாரத்தில் நடத்த முடிவு செய்யபட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.
மேலும் இந்த மாத இறுதியில் கால அட்டவணை வெளியிடப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது.

🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று  (04.05.2020) முற்பகல் சரியாக 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை காணொளி வழியே நடைபெற்றது.
தமிழகத்திலேயே முதன் முதலாக காணொளி வழியே மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்திய ஒரு ஆசிரியர் இயக்கம் என்ற பெருமையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ளது.

🔥
🛡NTSE - தேசிய திறனாய்வு தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு

🔥
🛡கோரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் பள்ளிகள் திறந்தாலும் இறைவணக்க கூட்டம் ரத்து என கல்வி துறை அதிகாரிகள் தகவல் - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் கணினி ஆசிரியர்களுக்கு Python Program தொடர்பாக 2 வார கால ஆன்லைன் பயிற்சி.
மாணவர்களுக்கு Python Program கற்றுத்தர ஏதுவாக Amphisoft Technologies மூலம் பயிற்சி- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

🔥
🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின்  கிளை அமைப்புகள்  மூலம் மட்டுமே நிவாரண உதவியாக அளிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு கோடியே பத்து இலட்சம். மேலும் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு வருவதாக பொதுச் செயலாளரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுப்பதைப்போல் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் செயல்படுத்த கோரிக்கை - நாளிதழ் செய்தி

🔥
🛡ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது.

🔥
🛡 தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3550-ஐ தொட்டது.  இந்திய அளவில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தமிழகம்  நான்காம்  இடத்தில் உள்ளது.  இதுவரை 31  நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.


Comments

POPULAR POST OF OUR WEB

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DANCE 2026

KALAI THIRUVIZHA IN TNSCHOOLS 2026-27

5th STD ENNUM EZHUTHUM WORK BOOK ANSWERS TAMIL 2026-27