MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 04.04.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 21 ♝ 4•4•2019*

🔥
🛡தேர்தல் 2019 - 2ஆம் கட்ட தேர்தல் பயிற்சியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு கணினி மூலம் மையங்கள் - பயிற்சி பெறும் தொகுதிகளிலேயே பணியாற்ற நடவடிக்கை.

🔥
🛡நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் உபரியாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் பட்டியலையும் அவர்கள் மாதம் ஒன்றுக்கு பெறும் ஊதியத்தின் விபரத்தினை உயர்நீதிமன்ற கிளையில்  தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் மேற்கண்ட தகவல்களை விரைந்து அனுப்ப  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

🔥
🛡குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு :
www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறியலாம் - TNPSC அறிவிப்பு.

🔥
🛡10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 11க்குள் முடிக்க திட்டம்.

🔥
🛡நடப்பாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தும் : உயர்கல்வித்துறை அறிவிப்பு.

🔥
🛡பதவி உயர்வு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள்  "போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் இல்லை" என இன்மை அறிக்கை வெளியீடு - கடலூர் CEO கடிதம்.

🔥
🛡Attendance App இல் மாணவர் வருகையை பதிவு செய்யாத ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை  - காஞ்சிபுரம் CEO உத்தரவு.

🔥
🛡TN Schools Attendance App Help Line Number : 14417 : தங்களது பள்ளி வருகைப் பதிவேடு ஆன்ட்ராய்டு போன் மூலமாக பதிவு செய்வதில் ஏதும் சந்தேகம் இருந்தால் இந்த 14417 தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக எடுத்து தமிழில் அழகாக பதில் விளக்கமாக சொல்கிறார்கள்.  24 மணி நேர சேவை இது ;  தேவைப்படுவோர் பயன் படுத்தலாம்.

🔥
🛡வேளாண் படிப்புக்கு ஜூலை 1ல் அகில இந்திய நுழைவு தேர்வு : விண்ணப்பிக்கும் முறை, இடஒதுக்கீடு விபரங்களை
www.ntaicar.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

🔥
🛡EMIS - ஏப்ரல் 2019 :  பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பாக தலைமையாசிரியர்கள் சான்று அளிக்க வேண்டும்.

🔥
🛡காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர  சரஸ்வதி மகாவித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்
பகுதிநேரத்தில் பயிலும்   M.Phil & Ph.D படிப்புகள்
ஊக்க ஊதிய உயர்வுக்கு தகுதியானவை என்றும், மேலும்  தொலைத்தூரக் கல்வி மூலம்   வழங்கப்படும் M.Phil & PH.D படிப்புகள் ஊக்க உயர்வுக்கு தகுதியற்றவை   எனவும்  பள்ளிக்கல்வி இயக்குநர் தெளிவுரை வழங்கியுள்ளார்.

🔥
🛡ஏப்.1, 2019-க்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயம் - வருமானவரித் துறை அறிவிப்பு.

🔥
🛡ஜூனில் பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் விண்ணப்பிக்கலாம்.

🔥
🛡முன் எப்போதும் இல்லாத வகையில் தபால் ஓட்டுப் போட ஆர்வம் காட்டும் ஆசிரியைகள் - நாளிதழ் செய்தி.

🔥
🛡வரும் 06.04.2019 அன்று தெலுங்கு வருடப் பிறப்பை கொண்டாடும் ஆசிரியர்கள் தவிர மற்ற அனைவரும் 11, 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்த வேண்டும்- தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவு

🔥
🛡பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதி - இந்தியாவில் அறிமுகம் செய்தது வாட்ஸ்-அப் : செய்தியின் நம்பகத்தன்மையை அறிய  ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை ‘91-9643000888’ என்ற எண்ணுக்கு அனுப்பினால் சரிபார்க்கும் மையம் அச்செய்தியை சரிபார்த்து அது உண்மையானதா? பொய்யானதா? சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28