MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 02.04.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 பங்குனி 19 ♝ 2•4•2019*

🔥
🛡EMIS-வலைத்தளத்தில் மாணவனின் பெயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளதா என்பதனையும், மாணவர்களின் போட்டோ, தந்தை பெயர் போன்றவை சரியாக உள்ளதா என்பதனை ஏப்ரல்-8 ஆம் தேதிக்குள் சரிபார்க்க உத்தரவு.

🔥
🛡DGE-பிளஸ் 2 விடைத்தாட்கள் திருத்தி முடித்தால் பிளஸ் 1 விடைத்தாள்களை தொடர்ந்து மதிப்பீடு செய்யலாம் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

🔥
🛡புதிய அரசாணையை உயர்கல்வித்துறை திரும்பபெறும்பட்சத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த தயாராக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.  கடந்த ஆண்டு முதல்முறையாக இணையதளம் மூலம் இன்ஜினியரிங் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

🔥
🛡கொலை செய்யும் "கொஸ்டீன் பேப்பர்" - பொது தேர்வு கேள்வித்தாள் குறித்து குமுதம் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

🔥
🛡பள்ளியில் ரோபோக்கள் மூலம் பாடம் நடத்தும் திட்டம் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡TNTET - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 45% மதிப்பெண் தகுதி  அறிவிப்பை ரத்து செய்து 40% ஆக புதிய அறிவிப்பு வெளியிடக் கோரி வழக்கு :
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

🔥
🛡அனைத்து தொடக்க / நடு நிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - Revised மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை ஏப்ரல்  2019 - தஞ்சாவூர் CEO வெளியீடு.

🔥
🛡தேர்வு & தேர்தல் காரணமாக தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கற்றல் விளைவுகள் பயிற்சி ஒத்திவைப்பு - வேலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அறிவிப்பு.

🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் & அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் -  தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்.



🔥
🛡TRB - TNTET
பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே இனி டெட் தேர்வை எழுத முடியும் என்ற புதிய விதிமுறையால் இந்த ஆண்டு டெட் தேர்வு எழுத காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பாதிப்பு.

🔥
🛡விடைத்தாள் திருத்தும் பணியில் விதிமுறை மீறல் - தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகப் புகார் - நாளிதழ் செய்தி.

🔥
🛡கர்நாடக மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ - மாணவியரின் பெற்றோர் ஓட்டு போட்டால்  பிள்ளைகளுக்கு தனியாக நான்கு மதிப்பெண் வழங்கப்படும் : ஓட்டு போடும் பெற்றோரின் பெயரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து சிறப்பு பரிசும் வழங்கப்படும் -
கர்நாடக மாநில தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு  நுாதன திட்டம் அறிவிப்பு.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28