MENU

Show more

அரசுபஸ் ஊழியர்கள் மீது ஐகோர்ட் பாய்ச்சல்

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அரசுபஸ் ஊழியர்கள் மீது ஐகோர்ட் பாய்ச்சல்

சென்னை: அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாத பட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள அரசு பஸ் ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும்

வழக்கு

சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் அவதிக்குள்ளாகியள்ளனர். இந்த ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விளக்கம்

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், போக்குவரத்து ஊழிர சங்கங்களுடன் பல கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அரசு ஒப்பந்தத்தை பல சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. தொமுச, சிஐடியு உள்ளிட்ட சில சங்கங்கள் தான் ஒப்பு கொள்ளவில்லை. அவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மக்கள் அவதிப்படுவதாக விளக்கமளித்தார்.

நோட்டீஸ்

இதனை தொடர்ந்து நீதிபதிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட துறை ரீதியிலான நடவடிக்கையை எடுக்கலாம். பணிக்கு வராமல் மக்களுக்கு பணியாற்றாதவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ், நர்சுகள் போராட்டத்தின் போது பல அறிவுரைகளை கோர்ட் வழங்கியுள்ளது எனக்கூறிய நீதிபதிகள், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் விளக்கமளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தொழிற்சங்கத்தினர் கருத்து

சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாக சவுந்திரராஜன் கூறுகையில்; இது ஒருதலைப்பட்சமானது. எங்களின் கருத்தை யாரும் கேட்கவில்லை. பொதுமக்கள் பாதிப்பிற்கு அரசுதான் பொறுப்பு. தொழிலாளர்கள் அல்ல. ஜனநாயக நாட்டில் எங்களின் பிரச்னைக்கு போராடுகிறோம். அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்க வேண்டும்.

செய்தி : தினமலர்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026