MENU

Show more

JOBS AT KVSCHOOLS 2016

பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

பணி வாரியாக பிரின்சிபால் பணிக்கு 90 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 690 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 926 பேரும், தொடக்கநிலை ஆசிரியர் பணிக்கு 4 ஆயிரத்து 499 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாட வாரியான மற்றும் இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...வயது வரம்பு:

பிரின்சிபால் பணிக்கு 35 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட வர்களும், தொடக்க நிலை ஆசிரியர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31-10-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட், சி.டி.இ.டி. ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

பிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1200-ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.750-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27-9-2016 முதல் 17-10-2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 22-10-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும்.

இது பற்றிய விவரங்களை kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28