MENU

Show more

பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியீடு

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.
ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது

. இந்தத் தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 39,697 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவ-மாணவிகள், தங்களது பதிவெண், பிறந்த தேதி, மாதம், ஆண்டினைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.

இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ, மார்க் ஷீட்டை www.dge.tn.nic.in என்ற வெப்சைட்டில் இருந்து வரும் 19ம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.

 மறு கூட்டலுக்கு விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுதினம் அவர்கள் பயின்ற பள்ளி வழியே விண்ணப்பிக்கலாம்.
தனியார் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் வேண்டுவோர், மறு கூட்டலுக்கு இப்போது விண்ணப்பிக்க கூடாது. அவர்களுக்கு பிறகு தேதி ஒதுக்கப்படும்.
இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கும் பி.இ. உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கவும் தற்போதைக்கு தாற்காலிகச் சான்றிதழ்களை மாணவர்கள் பயன்படுத்தலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026