Posts

MENU

Show more

Feel ‘guilty’ and ‘cheated’ for helping PM Modi, says Ram Jethmalani*

*Feel ‘guilty’ and ‘cheated’ for helping PM Modi, says Ram Jethmalani* *இந்தியாவின் அழிவை நிறுத்த வேண்டும்..!!*           *----------------------* நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு ஆதரவு அளித்ததற்காக, பிரச்சாரம் செய்ததற்காக நான் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு ஏமாற்றுக்காரர் இது வரை பிரதமர் ஆனதே கிடையாது. என் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கின்றேன். மரண வாயிலில் நிற்கின்றேன், எனக்கு வயது 93. பெட்டி படுக்கை எல்லாம் கட்டி வைத்து விட்டேன். இந்த உலகத்தை விட்டுப் புறப்பட ஆயத்தமாகி விட்டேன். அப்படி நான் போவதற்கு முன்பு, இந்த நரேந்திர மோடி கூட்டம் இனி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய முடியுமோ, அத்தனை வழிகளிலும் போராடுவேன்....  *ராம் ஜெத்மலானி* http://indianexpress.com/article/india/india-news-india/feel-guilty-and-cheated-for-helping-pm-modi-says-ram-jethmalani-2891759/

பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல்

Image
பணிப்பதிவேடு டிஜிட்டல்மயம் இழுபறி; ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்கு சிக்கல் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகள், மெத்தனமாக நடப்பதால், ஊதிய உயர்வு பெறுவதில், சிக்கல் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் உட்பட, அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, சம்பளம் நிர்ணயித்து வெளியிடப்பட்டது. இதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய சூழலில், இச்சம்பளத்தை பெற முடியாத நிலைஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில், ஆசிரியர்களின் பணிப்பதிவேடு உட்பட, பல கல்விசார் ஆவணங்கள், டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரு கின்றன. இப்பணிகளுக்காக, மாவட்ட கருவூலத்துறை அலுவலகங்களில், ஆசிரியர்களின் பணிசார்ந்த ஒட்டுமொத்த தகவல்கள் அடங்கிய, பதிவேடுகள் உள்ளன. இதை டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொள்வதில் தாமதம் தொடர்கிறது. இதனால், ஆசிரியர்களின் தகவல்களை தொகுப்பதில், சிக்கல் நீடிப்பதால், புதிய ஊதியத்தை வரையறுக்க முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் விழி பிதுங்கியுள்ளனர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில நிர்வாகி கூறியதாவது ...

ரிசர்வ் வங்கி மறுப்பு- விளக்கம்

பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும், டிச.,31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியானது. உடனடியாக: இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயமில்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், 2017 ஜூன் 1ல் அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், யார் யாருக்கெல்லாம் பொருந்துமோ அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாகும். இனியும...

சில கீரைகளின் இயற்கை மருத்துவம்

சில கீரைகளின் இயற்கை மருத்துவம்:- * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும். வாய் சுவையற்று இருந்தால் மாறிவிடும். வாந்தி போன்ற குமட்டல் நிற்கும். நல்ல பசியும் உண்டாகும். ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சுத்தமாகும். வயிற்று பிரச்சினைகளும் தீரும். * அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல், ஜன்னி, கபம், வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது. ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும். * முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம். முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து, தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும். ஆனால் புளி சேர்க்கக் கூடாது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும். * கண்களில் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சிறுக் கீரையை சாப்பிட்டு வந்தால், கண்களில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து விடும். குறிப்பாக கண் புகைச்சல் நீங்கி, பார்வை பிரகாசமாகும். * கொத்துமல்லிக் கீரை நல்ல வாசனையை உடையது. தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும். வாந்தி, குமட்டல் போன்றவை நிற்கும். * பசலைக் கீரையை, பசறைக் கீரை என்றும் சிலர் அழை...

வாசிப்பதில் தயக்கமா? பெற்றோர் கவனத்திற்கு

வாசிப்பதில் தயக்கமா? பெற்றோர் கவனத்திற்கு... வாசிப்பதற்கு கஷ்டப்படும் குழந்தைகளின் செவித் திறனை, பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்று பெற்றோர்களுக்கு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்! இங்கிலாந்தில் உள்ள கோவண்ட்ரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, வாசிக்க கஷ்டப்படும் குழந்தைகளில், 25 சதவீதம் பேரின் செவித் திறனில் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காது கேட்பதில் மிதமான இடர்பாடு இருக்கும் குழந்தைகளாலும், வகுப்பில் பாடங்களை முழுமையாக கவனிக்க முடியாமல் போகும். அடிக்கடி காதில் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளும் அவசியம் கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு பல்வேறு காரணங்களால், வார்த்தைகளின் உச்சரிப்பை, குழந்தைகளால் சரியாக புரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால், வாசித்தல் அவர்களுக்கு சவாலாக விளங்குகிறது. ஆரம்ப காலத்திலேயே பெற்றோர், தங்களது குழந்தைகளை கவனித்தால், இப்பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்! தகவல் : தினமலர்

நவ., 9ல் சான்றிதழ் சரிபார்ப்பு

நவ., 9ல் சான்றிதழ் சரிபார்ப்பு; டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவ., 9ம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு 20.05.2017 மு.ப. - பி.ப. அன்று நடத்தப்பட்டது. அதில், மொத்தம் 1779 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 54 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்-IIதேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 09.11.2017 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை' புதுடில்லி:'வங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்கு பவர்களும், டிச.,31க் குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டில்லியில் செயல்படும், செய்தி இணைய தளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டது. ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்: வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம் இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை. சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், ௧ல், மத்திய அரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்கு வைத்து உள்ளவர்கள், புதிதாக கணக்குதுவக்குபவர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில் ச...

TNPTF கல்விச் செய்திகள் 21.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 4~21.10.17🗓* நன்றி : தோழர் பாலமுருகன் ☀B.,Ed.,கற்பித்தல் பயிற்சி - Mother Teresa Womens's University-ல் தொலைதூர கல்வியில் பி.எட் படிக்கும் ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளி ,உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ☀TRB - சிறப்பாசிரியர் போட்டித்தேர்வு - தவறான கேள்விகள் கண்டறிந்து அனுப்ப இன்று கடைசி நாள் ☀ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர் என தலைமை செயலக வட்டார தகவல் ? ☀7th pay commission புதிய ஊதியம் நவம்பர் மாதமே வழங்கப்படும். Epayroll வலைதளத்தை மேம்படுத்த கால அவகாசம் தேவைபடுவதால் இம்முடிவு. மேலும் ஒரு மாத நிலுவை தொகை வழங்கப்படும். ☀SCERT - புதிய பாடத்திட்டம் தயாரித்தல் - திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் கோரி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். ☀அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - உள்கட்டமைப்பு வசதிகளை ரூ....

இனி GOOGLE மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்..

இனி GOOGLE மேப்பை வைத்து மற்ற கிரகங்களிலும் வழி தேடலாம்... வருகிறது புது வசதி! இனி கூகுள் மேப் ஆப்பைக் கொண்டு பூமியை மட்டுமல்லாமல் மற்ற கிரகத்தையும் தெளிவாக பார்க்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதிகளை பெற்ற கூகுள் மேப்பின் புதிய அப்டேட் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த புதிய அப்டேட் எப்படி இருக்கும் என மொத்த டெக் உலகமும் தற்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டது. உலகில் எந்த இடத்திற்கும் யாரிடமும் வழி கேட்காமல் செல்லும் வகையில் அனைவருக்கும் உதவியாக இருக்கும் ஆப் கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆப் ஆகும். அமெரிக்காவில் இருக்கும் தெருக்கள் தொடங்கி ஐநாவரத்தில் இருக்கும் தெருக்கள் வரை அனைத்தையும் துல்லியமாக காட்டும் வசதி கொண்டது இந்த கூகுள் மேப்ஸ் ஆப். ஒவ்வொரு முறையும் இந்த ஆப்பில் வெளியிடப்படும் அப்டேட்டில் புதிய அம்சங்கள் நிறைய இணைக்கப்படும். டிராபிக்கை அறிவது, ஆப் லைனில் பார்ப்பது என சில புதிய வசதிகள் உருவாக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெளியிடப்பட இருக்கும் அப்டேட்டில் பதினாறு அடிக்கு பதிலாக பல்லாயிரம் அடி பாய முடிவு செய்திருக்கிறது கூகுள் நிறுவனம். இ...

TNPTF கல்விச் செய்திகள் 20.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 3~20.10.17🗓* ☀JACTTO GEO :  இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட  தலைநகரங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஏழாவது ஊதிய குழு மாற்றமும் , ஏமாற்றமும் என்ற தலைப்பில் விளக்க கூட்டம் நடைபெறுகின்றது. ☀ JACTTO GEO : இன்று நடைபெறும் விளக்கக்கூட்டத்தின் மாவட்ட வாரியாக பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ☀NEET தேர்வை எதிர்கொள்ள 412 அரசு பயிற்சி மையங்கள் மற்றும் இனையதள பதிவு தொடர்பான இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀31 தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை  வழங்கப்பட்டுள்ளது. ☀அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்டங்களுக்கு இடையே உபரி மற்றும் தேவை அடிப்படையில் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளது. ☀ஊதியமாற்றமும் ஏமாற்றமும் - "தமிழ்நாடு தலைமைச்செயலகம் சங்கம்" அறிக்கை வெளியிட்டுள்ளது. ☀சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு கருணாநிதி வருகை தந்தார். முரசொலி ப...

கந்த சஷ்டி விரதம்

இன்று(20/10/17) வெள்ளிக்கிழமை முதல் மஹாகந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்🙏🙏🙏 கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இரு...

முதல்வர் காப்பிட்டு திட்டத்தில் டெங்கு

முதல்வர் காப்பிட்டு திட்டத்தில் டெங்கு ரத்த கசிவு நோய் டெங்கு ஷாக் சிண்ரோம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் சூழல் வந்தால் அதற்கான செலவு சேர்க்கப்பட்டுள்ளது. இதை தனியார் மருத்துவமனைகள் மறுக்க கூடாது. அப்படி மறுக்கும் பட்சத்தில் 044_24350496/24334811 என்ற தொலைபேசி எண்ணிலும் 9444340496/9361482899 என்ற மொபைல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி.. சுகாதரத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் ஜீனியர் விகடன் 18.10.17 Content disclaimer மேற்காணும் தகவல் .. உTNSOCIALPEDIA உறுதிபடுத்தாத தகவல்... 

நாட்டு மருத்துவம்..

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! 1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒ...

TNPTF கல்வி செய்திகள் 19.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஐப்பசி 2~19.10.17🗓* ☀National Scholarship Portal( நேரடி கல்வி உதவித்தொகைக்கு 98 லட்சம் மாணவர்கள் பதிவு: இடையூறு இன்றி பலன் கிடைப்பதால் வரவேற்பு ☀தேசிய வருவாய் வழி திறன் கல்வி உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை: மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வலியுறுத்தல். ☀தொடக்கக்கல்வி ஆசிரியர்கள்-மாணவர்கள் விபரங்கள்: தகவல் தொகுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு  உத்தரவு ☀ஓய்வூதியர்களுக்கான புதிய ஊதியக்குழுவின் படி ஊதியம் நிர்ணயம் வெளியிடப்பட்டுள்ளது. ☀தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  பல கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் செய்வதற்கு மாநிலம் முழுவதும் ஆயத்தமாகிவருகிறார்கள். - நாளிதழ் செய்தி ☀மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ☀குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை வடிவமைக்கும் போட்டியை அஞ்சல்  துறை...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

🎁🎉💥🎉💥🎉💥🎁 இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் 💥மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்வினில் மனம் பட்டாசாய் இனிப்போடும் களிப்போடும்  கொண்டாடுவோம் 💥இல்லத்தில் அகலொளிர இன்பத்தில் மனம் ஒளிரட்டும் 💥உள்ளத்தில் இருள் ஒழிந்து எண்ணத்தில் அருள் விழிக்க வண்ணமாய் வாழ்வு செழிக்கட்டும்.... 💥சிதறும் பட்டாசுஒலி வாழ்வின் சிரிப்பொலியாக மாறட்டும் 💥மிளிரும் மத்தாப்பு ஒளியும் ஒளிரும் வாழ்வாய் இனிக்கட்டும் 💥தேனாய் இனிக்கும் இனிய தீபாவளியாய் மலர வாழ்த்துகிறேன்.... 💥என்றும் இன்பங்கள் மலரும் தீபஒளியாக அமையட்டும் .... *இனிய தீபாவளி* *நல் வாழ்த்துக்கள்* நட்புடன் R.R

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு - உரையாடலாக முழு விளக்கம்..

2009 க்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியரூக்கும் எனக்கும்(2012 TET) நடந்த சுவாரசியமான உரையாடல்: அவர்: என்ன நீங்க ஆ ஊன்ன 2009 க்கு முன்னால appointment ஆனவங்களோடவே போட்டி போடுறீங்க. நீங்க  6th pay commission implement ஆனதுக்கு அப்பறந்தானே வேலைக்கு வந்தீங்க. அப்பறம் எப்படி உங்களுக்கு பலன் கிடைக்கும்?நாங்களும் பாத்துட்ருக்கோம். நீங்க வேலைக்கு வந்ததுல இருந்தே இப்டி தான் பண்றீங்க. நான் : அப்போ 6th pay commission la unga basic எப்படி fix பண்ணாங்க? அவர்: 1.1.2006 அன்னிக்கி உள்ள basic வச்சு. நான்: அப்போ உங்க basic என்ன  ? அவர்: அப்போ நாங்க consolidated pay (3000 ₹) ல இருந்தோம். நான்: அப்போ நீங்க service கே வரல மாதிரிதானே. அப்போ உங்களுக்கும் 5200+2800 தானே. அப்பறம் எப்படி உங்க basic க்க  8370+2800 ன்னு fix பண்ணாங்க. அவர் :♪♪♪♪♪ நான்: அதே மாதிரி 2007,2008 ல appointment ஆனவங்களுக்கும் 5200+2800 தானே கொடுக்கணும். அவர்: ஆமா! நான்: 1.1.2006 க்கு அப்புறம் appointment ஆனவங்க எல்லாரையுமே ஒரே கட்டுல தானே வைக்கணும். அவர்; ஆமா ஆமா!! நான்: சரி நீங்கல்லாம் எங்க sen...

தீபாவளி ரிலீஸாகும் திரைப்படங்கள்..

தீபாவளி பண்டிகை என்றால் ஸ்வீட், பட்டாசு, புத்தாடைக்கு பிறகு முக்கிய இடம் பிடிப்பது சினிமா தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தீபாவளி லிஸ்டில் இருந்து சினிமா விலகிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் பண்டிகையை குறித்து ஏகப்பட்ட படங்கள் ரிலீஸாகின. ஆனால் இந்தாண்டு வெறும் மூன்று படங்கள் மட்டுமே ரிலீஸாகின்றன. அந்த படங்கள் என்ன, அவற்றைபற்றிய சிறு முன்னோட்டம் இது... மெர்சல் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் முதன் முறையாக நடிக்கும் படம். 'தெறி' படத்தின் வரவேற்பிற்குப் பிறகு இயக்குனர் அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்தது பலருக்கும் பொறாமைதான். 'மெர்சல்' படத்திற்குப் பிறகு விஜய்யை மீண்டும் அட்லீ இயக்கப் போகிறார் என்பது இன்னும் பலருக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். சிவா - அஜித் கூட்டணியை விட அட்லீ - விஜய் கூட்டணி பலமாக இருக்கிறது என்கிறார்கள் திரையுலகத்தில். 'மெர்சல்' படத்தின் கதை என்று இரண்டு நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு சில கதைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. அவை உண்மைதானா என்பது 18ம் தேதி தெரிந்துவிடும். படத்தில் மூன்று விஜய், அப்பா விஜய்க்கு ...

ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்

 *தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்!!!* 🥀தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 🥀நாடு முழுவதும் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை வரன்முறைபடுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. 🥀அதில், அரசின் அனைத்து சேவைகளும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் மூலமாக உடனுக்குடன் பதிவு செய்து உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 🥀மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், இசேவை மையங்கள் அமைக்கப்பட்டு பிறப்பு, இறப்பு, வருமான, சாதி, இருப்பிடம், மற்றும் வரி வசூலினங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மெயின் சர்வர் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டது. 🥀இதனிடையே சாப்ட்வேரில் திடீர் குளறுபடிகள் ஏற்பட்டது. சிக்னல் பழுது காரணமாக பிறந்த குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்வதில்...

TNPTF கல்விசெய்திகள் 17.10.17

☀【T】【N】【P】【T】【F】☀  〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 புரட்டாசி 31~17.10.17🗓* ☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை மிக துல்லியமாக பதிவு செய்த NEWS TODAY ஆங்கில நாளிதழ் ☀பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் -TNPCB P & D இந்திய உச்சநீதிமன்றதீர்ப்பு -W.P(C) 72 of 1998-ன்படி தீபாவளி 2017 பண்டிகை கொண்டாடுதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் -SSA - கணிணி வழிக்கற்றல் உட்கூற்றின் கீழ் ( RAA ) திட்டத்தின் மூலம் "குறுவள மைய அளவிலான " "அறிவியல் கண்காட்சி" நடத்துதல் சார்ந்து செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ☀தீபாவளி விடுமுறையில்  மாற்றமில்லை. இன்றும் நாளையும் விடுமுறை -தொடக்ககல்வி இணை இயக்குனர் தகவல் ☀தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ☀2018 ஜனவரி முதல் டிஜிட்டல் முறை: 9 லட்சம் அரசு ஊழியர்கள், சுமார் 8 லட்சம் ஓய்வூதியர் விவரங்கள் டிஜிட்டல் மயம்...

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு அறிவுரை

வருகிறது பருவ மழை : பள்ளிகளுக்கு அறிவுரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கவிருப்பதால் பள்ளிகளில் பாடங்களை விரைந்து முடிக்குமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் வட கிழக்கு பருவ மழை துவங்கும்; அடுத்த ஆண்டு ஜன., இரண்டாம் வாரம் வரை மழை நீடிக்கும்; தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்யும். புயல், வெள்ளம், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது போன்ற இயற்கை பேரிடர் பிரச்னைகள் வட கிழக்கு பருவ மழை காலத்தில் ஏற்படும்.அதனால் பள்ளி, கல்லுாரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் சென்னை உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிகளில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே இந்த ஆண்டு முன்கூட்டியே பாடங்களை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட கிழக்கு பருவ மழைக்கு விடுமுறை விட்டாலும் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் தர வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026