Posts

MENU

Show more

அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு

💥💥அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்பு சென்னை, பிப். 17– அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 10–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடந்தது. வெள்ளிக்கிழமை முதல் அரசு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு துறையின் முக்கிய அலுவலகங்கள் முன்பு திரண்டு கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் எழிலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தாக்கலான இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் எவ்வித அறிவிப்பும் இடம் பெறாததால் ஏமாற்றம் அடைந்த அரசு ஊழியர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்று அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளதால் இன்ற...

எதிர்பார்ப்பு பட்ஜெட்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: இடைக்கால பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டசபை நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.தற்போதைய அ.தி.மு.க. அரசின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.தமிழக சட்டசபைக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க. அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அனேகமாக இந்த வாரம் முழுவதும் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்...

விசாரணை - சினிமா விமர்சனம்

Image
விசாரணை - சினிமா விமர்சனம் அ திகார வர்க்கத்தின் அடியாளாக இயங்கும் காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பு! முகமற்ற, முகவரியற்ற எளிய மனிதர்களுக்காக துளி வீரியம் குறையாமல், இம்மி சமரசம் இல்லாமல் இப்படி ஒரு படம் தந்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சல்யூட்.. முகவரியற்ற `கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம்’ குடிமகனோ, அரசியல் லாபிகளில் மல்ட்டிமில்லியன் புரட்டும் கோடீஸ்வரனோ... அதிகாரம் கழுத்தை இறுக்கினால் துரும்பும் தப்பாது என்பதை, முதுகுத்தண்டு சில்லிட விவரிக்கிறது ‘விசாரணை’யின் ஒவ்வொரு நிமிடமும்! தினேஷ், ஆந்திராவில் ஒரு மளிகைக்கடையில் வேலைபார்க்கிறார். முருகதாஸ் உள்ளிட்ட தினேஷின் மற்ற மூன்று நண்பர்கள் அங்கேயே வேறு சிறு வேலைகள் செய்கின்றனர். நால்வருக்குமே இரவுகளை பூங்காவில் உறங்கிக் கழித்து, காசை மிச்சம்பிடிக்கும் வயிற்றுப்பிழைப்பு. அப்படியான ஒரு பூங்கா இரவு விடிகிறது... மிக மோசமாக! எந்தக் காரணமும் சொல்லாமல் தினேஷ் மற்றும் நண்பர்களை திடீரென அதிகாலையில் அழைத்துச்செல்லும் ஆந்திர போலீஸ், அடி வெளுத்து எடுக்கிறது. உயிரை மட்டும் மிச்சம் வைத்து உடலின் ஒ...

ஸ்டிரைக்... தமிழகம் ஸ்தம்பிக்குமா ?

ஸ்டிரைக்... மத்திய உளவுத்துறையின் அறிக்கை பிப் 16க்குப் பின் தமிழகம் முழுவதும் போராட்ட களமாக மாறும் தீவிரமடையும் போராட்டங்கள் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தீவிரமடைவதால், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வர உள்ளதால் அரசின் பதவிக்காலம் முடிவதற்குள், எப்படியாவது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்ற நோக்கில், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்கான புதிய பென்ஷன் திட்டம் மற்றும் ஆறாவது ஊதிய கமிஷனின் பல்வேறு குளறுபடிகள்தான், அரசு ஊழியர்களிடையே போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் காலமுறை ஊதியம், முழு நேர ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் ஸ்டிரைக்கால் கிராமப்புறங்களில் நுாறு நாள் வேலை திட்டம் தடைபட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற...

காதல்...காதல்...

காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28