TN REGISTRATION NEW RULES 2025
இனி பத்திரப்பதிவு செய்ய எழுத்தர்களோ, வக்கீல்களோ தேவையில்லை. பொதுமக்களே பத்திரத்தினை நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம்...
அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளில் இடைத்தரர்களை ஒழிக்க பல நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இலவசமாக அல்லது குறைவான மதிப்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு மக்கள் லஞ்சம் வழங்கும் சூழல் உள்ளது.
இதனை ஒழிக்க தமிழக அரசு பல சேவைகளை மக்களே நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. உதாரணமாக வருவாய் துறை சான்றிதழ்களை தற்போது பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும்.
அதைப்போலவே, பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் போன்ற சொத்துகளை பதிவு செய்ய பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மூலமாகவே ஆவணங்களை பதிவு செய்து வந்தனர். இனி, பொதுமக்களே ஆவண எழுத்தர்கள், வக்கீல்களின் உதவியின்றி பத்திரப்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பத்திர பதிவுத்துறையில் லஞ்சத்தை ஒழிக்க கடந்த 2 ஆண்டுகளாக பல மேம்பாடுகள் படிப்படியாக செய்யப்பட்டு வந்தது. முதலில் 1975-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950-ம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களை http://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் தாங்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பத்திரப்பதிவு செய்ய, பத்திரப்பதிவுத்துறை இணையதளத்தில் ஆவணங்களின் வகை, தான செட்டில்மென்ட், பாகப்பிரிவினை போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் விற்பவர் பெயர், வாங்குபவர் பெயர், நிலம் அமைந்திருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம், கிராமம், சர்வே எண், நிலத்தின் அளவு போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால், ஆவணம் தானாகவே உருவாகும்.
அடுத்ததாக, பதிவு செய்பவர் யார் என்ற பகுதியில், ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞருக்கு பதிலாக சுய பதிவு என்பதனை குறிப்பிட வேண்டும். ஆவணத்திற்கான கட்டணத்தை செலுத்தி நாள், நேரத்தை முடிவு செய்ய வேண்டும். இறுதியாக, ஆவணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 18001025174 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பத்திரப்பதிவு துறையில் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment