MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 30.06.2020

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2051 ஆனி  16 ♝ &* 
30.6.2020

🔥
🛡+2  மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

🔥
🛡பத்தாம், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

🔥
🛡பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான விபரங்களை அனுப்பும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🔥
🛡PRAGYATA திட்டம் : ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு

🔥
🛡பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களின் வருகைப் பதிவை எந்தவித புகாருக்கும் இடமின்றி இணையதளத்தில் கவனமாக பதிவேற்ற வேண்டும் என பள்ளிகளுக்கு அரசுத் தோவுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி நடைமுறையில் 
ஊழியர்களின் பயணப்  படிக்கு வரிவிலக்கு சலுகை அறிவிப்பு.

🔥
🛡தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡 தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86224-ஐ தொட்டது.  இந்திய அளவில்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கையில் தமிழகம்  மூன்றாம்  இடத்தில் உள்ளது.  இதுவரை 1141 நபர்கள் இறந்துள்ளனர். - நாளிதழ் செய்தி.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026