MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 6.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 கார்த்திகை 20♝ 6•11•2018*

🔥
🛡லேசான மழைக்கு விடுமுறை விடக் கூடாது என்பது உள்பட மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது. - நாளிதழ் செய்தி

🔥
🛡ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்த விழிப்புணர்வுக் கல்வி மற்றும் பயிற்சி!!

🔥
🛡கோவை, பாரதியார் பல்கலையில், விதிகளை மீறி, கல்வி மைய அனுமதி வழங்கியது தொடர்பாக, நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பி உள்ளது. அதனால், படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

🔥
🛡 கல்வி, கலாசார விழாக்களை நடத்த அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கம் தயார்: பொது நூலகத் துறை தகவல்

🔥
🛡 மதிய உணவுத் திட்டத்தை, பள்ளிகளில் முறையாக நடைமுறைப்படுத்த,
உரிய நடவடிக்கை எடுக்காத, அருணாசல பிரதேசம், ஒடிசா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துநேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறதா என துவக்கப் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய Flying Squads உருவாக்கம் - தருமபுரி CEO உத்தரவு.

🔥
🛡வகுப்பறை பங்கேற்றலை உயர்த்துதல் (IMPART- Improving Participation) என்ற செயல் திட்டத்தை தமிழ கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் செயல்படுத்த திட்டம்.

🔥
🛡 பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்து  ஆணை வெளியீடு.

🔥
🛡2019 ஆண்டில் தமிழ்மாநிலத்தில் மத்திய அரசு -அலுவலகங்களுக்கான விடுமுறை நாட்கள் அறிவிப்பு

🔥
🛡 தேசிய திறனறித்தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் ( http://www.dge.tn.gov.in)
இன்று வெளியீடு.

🔥
🛡 பான் கார்டு விதிகளில் இன்று முதல் மாற்றம் :
ஒவ்வொரு ஆண்டும் மே 31க்குள் மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும்.

🔥
🛡ஓய்வூதியர்களுக்கு மீண்டும் பணிவழங்கல்  : வேலைக்கு காத்திருப்போர் குமுறல் - நாளிதழ் செய்தி.

🔥
🛡ஜாக்டோ ஜியோ போராட்டம் 10ஆம் தேதி மதுரையில் முடிவு :-மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி! - நாளிதழ் செய்தி


🔥
🛡01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு

🔥
🛡 வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே புதியதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் டிசம்பர் 6 முதல் தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28