MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 3.12.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 கார்த்திகை 17♝ 3•12•2018*


🔥
🛡நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் உறுதி : தமிழகத்தின் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் : அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் : கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகள்  தொடரும் : ஜாக்டோஜியோ அறிவிப்பு.

🔥
🛡 வேலை நிறுத்த அறிவிப்பு;  அரசு ஊழியர்களை அழைத்து பேசுங்கள் - டாக்டர் ராமதாஸ் & டிடிவி. தினகரன் ஆகியோர் முதல்வருக்கு  அறிவுரை

🔥
🛡CPS-ஐ நீக்கினால்  ரூ12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு 

🔥
🛡 விழுப்புரம் மாவட்டத்தில் கர்நாடக மாநில ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விலையில்லா
சைக்கிள் வழங்கப்பட்டதால்  பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

🔥
🛡வங்கிகள் அனைத்தும் 26-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...!

🔥
🛡முதுநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை  பதவி உயர்வு வழியாக நிரப்ப  தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு . இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது.

🔥
🛡 ஜனவரி மாதம் முதல் பள்ளிகளில் காலை உணவு -அமைச்சர் அறிவிப்பு.

🔥
🛡 TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி - விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.12.2018.

🔥
🛡 பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பல்வேறு காரணங்களால், இடைநின்ற மாணவர்கள்மீண்டும் சேர்ந்து, கல்வியை தொடர, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இம்மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளம் வாயிலாக, வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🔥
🛡 அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணித் திறன் குறித்து பொது மக்கள்
அளிக்கும் மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு.
அடுத்த ஆண்டு, ஏப்ரல் 1 முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் - பிரதமர் அலுவலகம் தகவல்.

🔥
🛡 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, 75 சதவீத வருகை இருந்தால் மட்டுமே, தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் - கல்வித்துறை முடிவு.

🔥
🛡பகுதிநேர கணினி ஆசிரியர்களின் கல்வி தகுதி அரசின் கொள்கை முடிவிற்குட்பட்டது - CM CELL Reply.

🔥
🛡 TNTET 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் வழக்கு தொடர்ந்தவருக்கு சரியான பதிலுக்கு  கூடுதல் மார்க் வழங்க ஐகோர்ட் உத்தரவு.

🔥
🛡 வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகத்தில் மூன்று நாட்கள் (4,5,6) தொடர் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28