MENU

Show more

விழுப்புரத்தில் மர்ம கும்பல் கொடூரம்

விழுப்புரத்தில் மர்ம கும்பல் கொடூரம்: சிறுவன் கொலை, தங்கை பாலியல் கொடுமை, தாய் படுகாயம்

விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 8 வயது சிறுவனை கொலை செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மனைவி ஆராயி (45). கடந்த சில வருடங்களுக்கு ஏழுமலை இறந்து விட்டார். இவர்களுக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

தற்போது வெள்ளம்புத்தூரில் ஆராயி தனது கடைசி மகன் தமயன், மகள் தனம் ஆகியோருடன் வசித்து வருகிறார். மற்றவர்கள் அனைவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சராமாரியாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சிறுவன் தமயன் சம்பவ இடத்திலேயே இறந்தான். ஆராயி மற்றும் கடைசி மகள் தனம் படுகாயம் அடைந்துள்ளனர். அடுத்த நாள் வெகு நேரமாகியும் ஆராயி வீட்டு கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, மூன்று பேரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சிறுமி தனம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சினிமா பாணி போல் நடந்த இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி செய்தி:
m.tamil.samayam.com

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026