MENU

Show more

ஜாக்டோ ஜியோ - தொடர் மறியல்

பேச்சு நடத்தும் வரை மறியல் : 'ஜாக்டோ - ஜியோ' உறுதி



 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக, நேற்றும் மறியல் போராட்டம் நடந்தது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று முன்தினம், தொடர் மறியல் போராட்டம் துவங்கியது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், சென்னைக்கு வந்து போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, இரண்டாவது நாளாக போராட்டம் நீடித்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்துவது; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாதத்துக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர். அதுவரை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், கைதானவர்கள் முகாமிட்டிருந்தனர்.போராட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், தாஸ் கூறுகையில், ''போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் வகுப்புகளை, 'கட்' அடிக்கவில்லை. சுழற்சி முறையில் விடுமுறை கேட்டு, போராட்டத்தில் பங்கேற்கின்றனர். அரசு பேச்சு நடத்தும் வரை போராட்டம் தொடரும்,'' என்றார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28