*🔵🛑ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்! கந்தலான அட்டைகளுக்கு ஏப்., 1 முதல் விடுதலை* சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது. *10 லட்சம்* இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம் கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும். அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல், சம்பந்தப்பட்ட ரே...