Posts

MENU

Show more

உள்ளாட்சி தேர்தல் 2017

உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது - தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகே நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த அவசர சட்ட முன்வடிவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாகவும், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஏப்ரல் மாதம் பள்ளி தேர்வுப் பணியில் ஈடுபடுவதால் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் நடைபெற உள்ளன. எனவே, பல அரசுப் பள்ளிகளையும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாடாஆஆஆஆஆ

👉👉👉👉 ஏடிஎம்மில் பிப்.1 முதல் பணம் எடுக்க கட்டுப்பாடு கிடையாது.. 'கரண்ட் அக்கவுண்ட்'டுக்கு மட்டும்! டெல்லி: கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அவர்கள் எந்த உச்ச வரம்பும் இன்றி அவர்கள் பணம் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் இனி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து பழைய நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணத்தை டெப்பாசிட் செய்யவும் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒருநாளைக்கு குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. பணமதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பின் விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து...

SHALA SIDDDHI

SHALA SIDDHI ONLINE DEMO PDF click here

IT CALS2016-17within 5Mins

INCOME TAX CALCULATION WITHIN 5 MINS THANKS TO "TNPPGTA" & FILE MAKERS ... Click here to download EXCEL File

இந்தியா எனது உயிர் ...

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 பெருமைமிகு குடியரசு தின வாழ்த்துக்கள்... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👉🏼தியாகத்தில் விளைந்த சுதந்திரம்.. 👉🏼அகிம்சையில் மலர்ந்த இந்தியா... 👉🏼அன்பில் பண்பட்ட தாய் மண்ணே வணக்கம்.... 👉🏼வீழ்வது நாமாக இருப்பினும், விதைப்பது ஒற்றுமையாக , வெல்வது இந்திய தேசமாக இருக்கட்டும்... நட்புடன் R.R for more http://tnsocialpedia.blogspot.com

வேலைவாய்ப்பு - காவல்துறை 2017

தமிழ்நாடு காவல்துறையில் 15,711 காவலர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு! இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை-ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம்), இரண்டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை-ஆண்), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (ஆண் மற்றும் பெண்) மற்றும் தீயணைப்போர் (ஆண்) பதவிகளுக்கான 15,711 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கு இந்தியக் குடியுரிமையுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுத் தேர்வு-2017 தேர்வு குறியீட்டு எண், 1 விளம்பர எண், 117 காவல்துறை: 1. இரண்டாம் நிலை (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பொது ஆண்கள் - 4569, பெண்கள் - 46 2. இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை) பொது (ஆண்கள்) - 4627, பெண்கள் -3 3941 சிறைத்துறை: இரண்டாம் நிலை சிறைக் காவலர் பொது ஆண்கள் - 976, பெண்கள் - 39+1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை: தீயணைப்போர் - 1512 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம...

போராட்டம் திசை திரும்ப வாய்ப்பு

போதும்... 👉🏼ஜல்லிகட்டு மூலமாக நம் காளைகளை காப்பாற்ற முடியும்,இதனால் நம் தலைமுறை பசுவின் பாலை மட்டுமே பருகும்... 👉🏼இதோடு ஜல்லிகட்டுக்கான போராட்டத்தை கைவிட்டு கலைவதே நம் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி... அதைவிடுத்து நிரந்தர சட்டம் என எதையோ கேட்டு குழந்தைகள் போல அடம் பிடிப்பது வேடிக்கை... 👉🏼இதனால் சூழல் மேலும் சிக்கலாக வாய்ப்புள்ளது... அசாதாரண சூழல் ஏற்படுத்தி மீடீயா பசிக்கு நாம் இரையாக கூடாது... 👉🏼இந்த போராட்டமே மத்திய,மாநில அரசு,  உச்சநீதிமன்றம் என எல்லா தளங்களிலும்  பெரிய எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்துள்ளது... இனி ஜல்லிகட்டிற்கு தடை என்ற பேச்சுக்கே இடம் பெறாது... 👉🏼போதும் நம் வெற்றியை கொண்டாட தயாராவோம்... ஜல்லிகட்டுக்கு அனுமதி... போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புவதே மேல்... 👉🏼ஹிப் ஆப் தமிழா போராட்டம் திசை திரும்பும்அச்சத்தால் போராட்டத்திலிருந்து விலகல்... 👉🏼இதுவே நிரந்தர சட்டம் , இனி 1000ஆண்டுகளுக்கு ஜல்லிகட்டு நடக்கும்.. 👉🏼மக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தக கைவிட்டு தமிழக மாண்பினை காப்பற்ற வேண்டும்... 👉🏼திசை திரும்...

ஜல்லிகட்டு நிரந்தர தீர்வு - இதுவே வெற்றி

Image
ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும்: மார்க்கண்டேய கட்ஜு ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டம் பிறக்கப்பிட்ட பிறகும் கூட இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் போதாது. அதை நிரந்தர சட்டமாகக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ''அவசர சட்டத்துக்கு மாற்றாக வரும் 23-ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்'' என்று முதல்வர் ஓபிஎஸ் உறுதி கூறியுள்ளார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டர் பக்கத்தில், ''ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தமிழக சட்டப்பேரவையில் சட்டமாக இயற்றப்பட்டால் அதுவே நிரந்தரமாக இருக்கும். கவலைப்பட வேண்டாம்'' என...

தலையங்கம் - நாங்கள் தமிழர்கள்

தலையங்கம்- நாங்கள் தமிழர்கள்... 👍🏼உலகில் முதலில் தோன்றிய இனம் எங்கள் தமிழகம் தான்... 👍🏼திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும் உலகம் எழுத கற்கும் முன்பே படைத்துவிட்டோம்.. கலாச்சரம் எங்கள் வாழ்வுரிமை, நீதி எங்கள் சாதி , முல்லைக்கு தேர் கொடுத்த பாரி , மயிலுக்கு போர்வை தந்த பேகன், நீதி காத்த மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி... 👍🏼பாரதி வீறு நடை போட்ட தாய்மண்ணடா எங்கள் தமிழகம்.. 👍🏼அத்தகு பெருமைமிகு தமிழ் பாரம்பரியத்தை அழிக்க பார்த்தால் விடுவோமா ? வெகுண்ட எழுந்த இன்று வீதியில் இறங்கி போராடி கொண்டிருக்கிறது... 👍🏼நல்ல ஆட்சியாளர்கள் அமைத்திருந்தால் இன்று பச்சை குழந்தையும் போராட்ட களம் காணாமல் தாய் மடியில் உறக்கம் கொண்டிருக்கும்... 👍🏼சரி போனது போகட்டும் , இனி விரைவில் ஜல்லிகட்டு நடந்தேற அரசாணை பிறப்பிக்கப்படும்... தமிழர்கள் யார் என்று உலகம் பார்த்து விட்டது... பெருமை கண்டு தரணி வியக்கிறது... 👍🏼வாடிவாசல் திறக்கும் வேளையில் தமிழன் உரிமைக் கொடி பறக்கும் , இப்போது தான் கவனம் தேவை ஜல்லிகட்டு உலகமே பார்க்கும் வீர விளையாட்டாகி விட்டது, இதில் எந்த அசம்பாவிதமும் நடந்தேறிவிடக் கூடாது...

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

தமிழன்டா 💪🏼தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிகட்டு அனுமதி அவசர சட்டத்திற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்... 💪🏼குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்படுகிறது.. 💪🏼குறிப்பு : 6மாதத்திற்கு மட்டுமே அவசர சட்டம் செல்லும் என மத்திய அரசு திருத்தம் செய்து ஒப்புதல்... For more http://tnsocialpedia.blogspot.com

முதல் வெற்றி

ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கும் : முதல்வர் அறிவிப்பு புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும். ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். டில்லியில் பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என நேற்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி அளித்தார். இதன் அடிப்படையில், நேற்று டில்லியிலேயே தங்கி இருந்து, மிருக வதை தடை சட்டத்தின் கீழ் தமிழக அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு அவசர சட்டம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினேன். மிருக வதை தடை சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டு வந்து, அவசர சட்டத்தை தமிழக அரசே பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அவசர சட்டவரைவு கொண்டு வந்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பின்னர் கவர்னரி...

Why we want jallikattu ?

Why we want jallikattu ? Guys, I have had doubts related to how Jallikattu can help with preservation of native breeds and why can't breeders raise these even without events like Jallikattu. I was curious and enquired many people who were supporting Jallikattu. The answers that I got like it helps with financing the bull were not convincing. The only convincing answer in favor of Jallikattu was that it must be held for cultural reasons which most of the people parroted. But none of them were able to point me out to the actual reasons why this was beneficial. The videos that I was pointed out to described in great detail the advantages of A2 milk and how the preservation of native breeds which have the gene for producing A2 milk is important but none of them addressed the important question - How does Jallikattu help in their preservation and what is in it for native breeders. After seeing Senapathy's replies in an interview and after talking to Raja Manickam, I have finally ...

இனி ஜல்லிகட்டு செய்தி மட்டும்....

இனி தமிழன் குரல் தான்... 👊🏼நமது TNSOCIALPEDIA 2ஆண்டுகளாக பல்வேறு கல்வி, வேலைவாய்ப்பு , செய்திகள், இலக்கியம் , ஆன்மிகம் என பல்துறை தகவல்களை வெளியிட்டு வந்துள்ளது... 👊🏼சமீபத்தில் ஜல்லிகட்டு பற்றி வாக்கெடுப்பினை முதலில் பதிவு செய்தது.. 👊🏼தமிழகமே தன் பாரம்பரிய அடையாளத்தை மீட்க களம் காணும் இவ்வேளையில் ஜல்லிகட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை ஜல்லிகட்டு செய்திகளை மட்டுமே இனி tnsocialpedia  வெளியிடும்... 👊🏼வெல்வது தமிழாக தமிழனாக, நாமாக இருக்கட்டும் ... 👊🏼போராட்டகளத்தில் சட்ட உதவி, உணவு , தண்ணீர் தேவை என எல்லாவற்றையும் tnsocialpedia@gmail.com -க்கு மெயில் அனுப்புங்கள், உங்களுக்கு உதவும் உள்ளங்கள் தொடர்பு கிடைக்க tnsocialpedia வழி அமைக்கும்... நன்றி For more Jallikattu http://tnsocialpedia.blogspot.com

வாட்ஸ் அப் பார்வேட் - ஜல்லிகட்டு போராளிக்கு சட்ட உதவி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு யார்மீதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டாள் அவர்களுக்காக  உதிரத்துளிகள் வழக்கறிஞர்  அணி வழக்கு விவகாரங்களில்  ஆதரவாக செயல்படும் உதிரத்துளிகள்* மாநில,மாவட்ட நிர்வாகிகளின் பட்டியல்............ மாநில தலைவர் :- *திரு.கோவை.எஸ்.ஏ.தீன்* 9840506072 மாநில பொதுச் செயலாளர்:- *திரு.ஜெய் நாயுடு* 9500903090 மாநில பொருளாளர் :- *திரு.மில்ட்டன் ராபர்ட்* 9677692127 மாநில துணைத்தலைவர் :- *திரு.கண்ணன்* (ஈரோடு) 8870810985 மாநில துணை பொதுச் செயலாளர் :- *தியாக ராஜன்* (திருச்சி) 9659565616 மாநில மாணவரணி தலைவர் :- *திரு.விமல்* (சென்னை) 8144440407 *உயர்மட்ட ஆலோசனைகுழு*💥 *திரு.T.C.K.S.மகேந்திரன்*  (தலைவர்) *திரு.ஷாஜஹான்* (கோவை) 9047499000 *திரு.T.ஏ.ஆர்.பிரபு* (காட்பாடி) 9445502783. *திரு.முபாரக்* (புதுக்கோட்டை) 9976161857 *திரு.பிரேம் நசீர்* (காரைக்குடி) 8098179625 *மாநில ஒருக்கினைப்பு குழு💥* *திரு.சேக் அப்துல்லா* (கடலூர்) தலைவர் 8680868643 *திரு.வினு* 9965465305 *மாநில செயலாளர்கள்*💥 1) *திரு.சூர்ய பிரகஷ...

இது தான் தமிழன் கலாச்சாரம்

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..! #SupportJallikattu பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம். நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண்  இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம்.  அங்கிருந்த சி.சி.டி.வியில்  பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர்.  பெங்களூரு மட்டுமல்ல... தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம். பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான். ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி,இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சிக்கு  ஐந்தாவது இடம் கிடைத்தது. பெண்களுக்குப் பாதுகாப்பா...

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

சீறும் ‛இளங்காளைகள்': ஸ்தம்பிக்கும் தமிழகம்- தினமலர்  சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், 3வது நாளாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்தம்பித்த தமிழகம் : சென்னை மெரீனாவில் சாலையின் இருபுறமும் மாணவர்கள் பெருமளவில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சோழிங்கநல்லூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள், மெரீனா பகுதியில் திரண்டதால், அப்பகுதி முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. சென்னை மெரீனா, மதுரை தமுக்கம் மைதானம் பகுதி, கோவை வ.உ.சி., மைதானம், திருச்சி விமான நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால் அப்பகுதிகள் முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது. போலீசார் தொடர் பேச்சுவார்த்தை : சென்னையில் 2வது நாளாக மா...

ஜல்லிகட்டு எங்கள் உரிமை

*🔴🔵தற்போதைய செய்தி* *☦🅾மதுரை அலங்காநல்லுர்,அவனியாபுரம்,பாலமேட்டில் பதற்றம்.ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு.* மதுரை அலங்காநல்லுர்,அவனியாபுரம்,பாலமேட்டில் பதற்றம்.ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கல் அன்றும், மறுநாள் பாலமேடு, மூன்றாம் நாள் அலங்காநல்லூர் பகுதிகளில் வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தீர்ப்பளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்தது. ஜல்லிக்கட்டு நடத்த வழியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றாலும் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. அதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய தீர வேண்டும் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. இதை தொடர்ந்து இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளாரேஸ் உள்ளிட்டவை போன்ற எதுவும் நடந்து விடாமல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அலங்காநல்...

எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள் ஜனவரி 12

ஜனவரி 12: எம்.ஜி.ஆர் சுடப்பட்ட நாள் மலேசியவில் நடந்த ஒரு கூட்டத்திற்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார் நடிகவேள் எம்.ஆர்.ராதா. 'அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள்' என விழா ஏற்பாட்டாளர்கள் சொல்ல, எதையும் அலட்டிக் கொள்ளாமல் கூட்டத்தில் பேசினார் ராதா. ‘ எம்.ஜி.ஆரை சுட்டுட்டேன்னு ஆளாளுக்கு கோஷம் போடறாங்க. உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன். நானும் எம்.ஜி.ஆரும் ஐம்பது வருஷமாக நண்பர்களா இருக்கோம். எங்களுக்குள்ள சின்ன கோபம். செல்லமா சண்டை போட்டுட்டோம். அந்த சமயத்துல கம்பு இருந்திருந்தா கம்புச் சண்டை போட்டிருப்போம். துப்பாக்கிதான் இருந்துச்சு. சுட்டுக்கிட்டோம்'. இந்தியாவையே உலுக்கிய ஒரு வழக்கைக்கூட மிகச் சாதாரணமாகக் கடந்து போனார் எம்.ஆர்.ராதா. எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு 49 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றளவும் எம்.ஆர்.ராதா நடத்திய துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு அவ்வளவு எளிதில் அடங்கிவிடவில்லை. என்ன நோக்கத்திற்காக ராதா துப்பாக்கியைத் தூக்கினார்? என்ற கேள்விக்குப் பதிலைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடம்...

புதிய தலமுறை இன்று 151.17

புதிய தலைமுறை செய்தித்தாள் 15.1.17 click here PDF

பொங்கல் சிறப்பு கவிதை - கல்விசிறகுகள் ஆர்.கே

எண்ணாமல் இருந்த பேரும், ஓய்வையே மறந்த பேரும், உண்ணாமல் இருந்த பேரும், உறங்காமல் உழைத்த பேரும், கண்ணான கல்விதனை கற்றுத்தந்து காலத்தை வென்ற பேருமான ஆசிரிய நண்பர்களுக்கு, வணக்கம். வண்டெனப் பறந்து,      வாலிபர் உலகில் தொண்டு புரிந்திட்ட       தூயவனாம் தமிழ்மகனின் தலைநன்னாளாம், திங்கள் பன்னிரண்டு திகழும் ஆண்டில் ஓரெழுத்தால் உயர்ந்து நிற்கும்  தை முதல்நாள். இன்னனாளிலே . ....... புதுப்பானை புதியகோலம் புது மஞ்சள் புது காய்கள் புத்தரிசி இவைகொண்டு, தித்திக்கும் தீங்கரும்பின் துணையுடன்,புத்தாடை கட்டி, நன்னெறி வளர்த்து நற்பயன் செய்து உள்ளத்தால் பொய்யாது, உயர்நிலை நின்று, ஒழுக்கத்தால் பிறர்போற்றும் உயர்வாழ்க்கை வாழ்ந்து, சீர்பெற உழைத்து சிறப்புடன் வளர்ந்து, மலரினும் மென்மையாய், வானினும் தூய்மையாய், நிலையினிற் செம்மையாய், நினைவினிற் பசுமையாய், தொலைவழி போயினும் தோன்றிடும்  இன்பமாய்   கொண்டாடுவோம் இத்தைத் திருநாளை. கவலைகள் கழிந்து புன்னகைகள் புகுகின்ற, உழவர்களால் ஆன திருநாளாம், உழவர்களுக்கான திருநாளாம் இன்னன்னா...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28