அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?*
*அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி- தமிழகத்தில் மட்டும் கிடப்பில் போடப்பட்டது ஏன்?* *மத்தியரசின் திட்டங்களில்* இந்திய அளவில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வியை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. 2005–06 ஆம் கல்வி ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 53,000 பள்ளிகள் பயன்பெற்று வந்தன. இது தற்போது விரிவுபடுத்தப்படுகிறது. விரிவுபடுத்தப்படும் இந்த திட்டம் 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்படும். இதற்கென ரூ.6,926.13 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்காக ரூ.6,000 கோடி கிடைக்கும். மீதத் தொகையினை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் கல்வியினை வளரும் மாணவர்களுக்கு அளித்து அவர்களை கம்ப்யூட்டர் பயனாளர்களாக மாற்ற இது பெரும் அளவில் உதவும். குறிப்பாக அரசு பள்ளிகள் ஏழை கிராமப் புற மாணவர்களுக்குக் கல்வியை வழங்கி வருவதால், இந்த திட்டம் பெரும் அளவில் மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். கம்ப்யூட்டர் கல்வி வழங்கப் பயன்படுத்தப்படுவதுடன், பிற பாடங்களைக் கற்று...