MENU

Show more

HSC RESULTS ANNOUNCEMENT

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது தள்ளி போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் 13-ம் தேதி பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்கள் மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதினர். பிளஸ் 2 பொதுத்தேர்வு ஏப்ரல் 3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்தநிலையில், கடந்த 10-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. கடந்த 21-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7ம் தேதி நடக்க உள்ளது.

நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிட்டால், பிளஸ் 2வில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, மே 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடாமல், நீட் தேர்வு முடிந்த மே 7ம் தேதிக்கு பின், பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

Source  : 

• THE SEITHIKATHIR 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

KALAI THIRUVIZHA DANCE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026