MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 09.10.2019

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 புரட்டாசி 22 ♝ &   9•10•2019*

🔥
🛡அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை

🔥
🛡திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது.

🔥
🛡காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி

🔥
🛡தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை- நாளிதழ் செய்தி

🔥
🛡செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு, வரும், 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற, சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔥
🛡மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன

🔥
🛡அடுத்த ஆண்டு (2020) முதல் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

🔥
🛡மத்திய மனிதவளத் துறை சார்பில், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். இத்தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்று மாணவர்கள் எதிர்பார்ப்பு




Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026